பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு

பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு | பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 24-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை பள்ளி மாண வர்கள், தனித்தேர்வர்கள் என ஏறத்தாழ 9 லட்சம் பேர் எழுது கிறார்கள். பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரி யல், தாவரவியல், விலங்கி யல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களுக்கும் தொழிற்கல்வி பாடங்களுக்கும் கருத்தியல் தேர்வுடன் (தியரி) செய் முறைத் தேர்வும் உண்டு. செய் முறைத்தேர்வு தேர்ச்சிக்கு குறிப் பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் செய்முறைத்தேர்வு கண் காணிப்பு பணிக்கு வேறு பள்ளி களைச் சேர்ந்த ஆசிரியர்கள்தான் ஈடுபடுத்தப்படுவார்கள். பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில், செய்முறைத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து மேல் நிலைப்பள்ளிகளிலும் நடை பெற்று வருகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வைப் போன்று செய்முறைத் தேர்வு மாநிலம் முழுவதும் ஒரேநாளில் நடத்தப் படுவதில்லை. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ் வேறு நாட்களில் நடத்தப் பட்டாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்நிலையில், செய்முறைத் தேர்வுக்கான காலக்கெடுவை நிர்ணயித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்முறைத் தேர்வு நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக ளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி 2-ம் தேதி முதல் 24-ம் தேதிக்குள், செய்முறைத்தேர்வு, கேட்டல், பேசுதல்ா திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். அதேபோல், தனித்தேர் வர்களுக்கு, பிப்ரவரி 23 முதல், 25-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Comments