-->

Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு | ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று கடையடைப்பு ஜல்லிக்கட்டை காப்பாற்றியாக வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ-மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் நாளை (இன்று) தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடைகளை அடைப்பது என்று வணிகர் பேரவை முடிவு எடுத்திருக்கிறது. கடைகளை அடைப்பதுடன் தங்கள் பகுதியில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை வியாபாரிகள் நடத்துவார்கள். நல்ல குடிநீர் கிடைக்காமல், கொசுக்கடி, சுற்றுச்சூழல் கேடு என்று நாளும் வதைப்படும் மக்களை பற்றி கவலைப்படாமல் மிருகங்களுக்காக வாதாடுவதாக சொல்லி தேவையற்ற விதத்திலும், அன்னிய ஆதிக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வணிகர் பேரவை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விக்கிரமராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள்-இளைஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கிறது. இப்பிரச்சினையில் மத்திய அரசு தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உடனடியாக சட்டப்பூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும். இன்று (நேற்று) மாலைக்குள் மத்திய அரசு சட்டபூர்வமான முடிவை அறிவிக்கவில்லை என்றால், மாணவர்கள்-இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழக வணிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் 20-ந்தேதி (இன்று) தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 20-ந் தேதி (இன்று) 4,500 வியாபாரிகள் சங்கங்களும், 10 லட்சம் வணிகர்களும் கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என்று கூறினார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.