17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.

17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி. | பதினேழு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சரிடம், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடக்க பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான விதிகளில், குளறுபடி நீடிக்கிறது. அதாவது, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவர்கள், தொடக்க பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும், பின், பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். தொடர்ந்து, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, பணிமூப்புஅடிப்படையில், பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை. 1999ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பட்டம் பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கே, பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சங்க பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பட்டதாரிஆசிரியர்கள் இல்லாததால், 1999ல், இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், பதவி உயர்வு விதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே நேரம், 14 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், பழைய விதிகளை மாற்றாமல், பதவி உயர்வு வழங்கப்படுவதால், நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்காமல், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்Comments