எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு, 17.01.2017 (செவ்வாய் கிழமை) மட்டும் செலவாணி முறிச்சட்டம் 1881- ன் கீழ் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், அரசினால் அமைக்கப்பட்டுள்ள வாரியங்கள் மற்றும் கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகள், தொழிற்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் முதலியவற்றிக்கும் பொருந்தும். பிற நிறுவனங்களும் இவ்விழாவின் சிறப்பினை கருத்தில் கொண்டு தங்களது அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு அரசிதழில் வெளிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இன்று வெளியான அறிவிப்பையடுத்து, நாளை முதல் செவ்வாய் கிழமை வரை 4 நாட்கள் தொடர்ச்சியாக தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாக அமைந்துள்ளது.Comments