ஏடிஎம்களில் இனி தினமும் ரூ.10 ஆயிரம் எடுக்கலாம் ரூ.4,500 ஆக இருந்த உச்சவரம்பு உயர்வு வாரம் ரூ.24 ஆயிரத்துக்கு மேல் எடுக்க கட்டுப்பாடு நீடிப்பு

ஏடிஎம்களில் இனி தினமும் ரூ.10 ஆயிரம் எடுக்கலாம் ரூ.4,500 ஆக இருந்த உச்சவரம்பு உயர்வு வாரம் ரூ.24 ஆயிரத்துக்கு மேல் எடுக்க கட்டுப்பாடு நீடிப்பு | வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு ரூ.4,500-லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. எனினும் வாரத்துக்கான உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக நீடிக்கிறது. இதுபோல நடப்புக் கணக்கி லிருந்து பணம் எடுப்பதற்கான வார உச்சவரம்பு ரூ.50 ஆயிரத் திலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக் கப்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகளின் ரொக்க பிரச்சி னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி திடீரென அறிவித்தார். கறுப்பு பணம், கள்ள நோட்டு, வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என அவர் தெரிவித்தார். அதேநேரம் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ள லாம் என்று அறிவித்தார். ஆனால், புதிய நோட்டுகள் குறை வான அளவிலேயே அச்சடிக்கப் பட்டிருந்ததால் நாடு முழுவதும் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஏடிஎம் மற்றும் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் எடுப்பதற்கான தினசரி உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி குறைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக, சில ஏடிஎம்களில் மட்டுமே பணம் நிரப்பப்படாததால், பணம் எடுக்க பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலான ஏடிஎம்கள் 2 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டன. இதனால் கூட்டத் தொடர் முழுவதும் முடங்கின. மேலும் நாடு முழுவதும் எதிர்க் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே, ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, "இந்த பணமதிப்பு நீக்க நடவடிக் கையால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளதை நன்கு அறிவேன். நாட்டு நலனுக்காக 50 நாட்களுக்கு இந்த சிரமத்தைப் பொருத்துக் கொள்ள வேண்டும்" என்று உருக்க மாக வேண்டுகோள் விடுத்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற் கான காலக்கெடு கடந்த டிசம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு கடந்த 1-ம் தேதி ரூ.2,500-லிருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது இந்த வரம்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏடிஎம்கள் மற்றும் நடப்பு கணக்கிலிருந்து இருந்து பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு பற்றி மறு ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு ரூ.4,500-லிருந்து ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. அதேநேரம் வாரத்துக்கான உச்சவரம்பில் மாற்றம் எதுவும் இல்லை. இதுபோல நடப்புக் கணக்கிலி ருந்து பணம் எடுப்பதற்கான வார உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இது ஓவர்டிராப்ட் மற்றும் ரொக்கக் கடன் கணக்குகளுக்கும் பொருந்தும். இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் சிறு வர்த்தகர்களின் பணத்தட்டுப்பாடு படிப்படி யாகக் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.Comments