0.9 சதவீதம் குறைத்தது எஸ்பிஐ கடனுக்கான வட்டி விகிதத்தை ஐடிபிஐ, யூனியன் வங்கியும் வட்டிக் குறைப்பு

0.9 சதவீதம் குறைத்தது எஸ்பிஐ கடனுக்கான வட்டி விகிதத்தை ஐடிபிஐ, யூனியன் வங்கியும் வட்டிக் குறைப்பு | ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) அனைத்து வகை கடனுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதம் 8.9 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைந்துள் ளது. (எம்சிஎல்ஆர் என்பது வங்கி கள் வாங்கும் டெபாசிட் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் என புரிந்துகொள்ளலாம். இந்த விகிதத்துக்கு மேலே அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் இருக் கும்). இந்த புதிய வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள் ளது. இந்த நடவடிக்கையால் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகிய கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும். கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரூ.14.9 லட்சம் கோடி வங்கிகளுக்கு டெபாசிட் தொகை வந்திருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. வங்கி களில் டெபாசிட் அதிகரிப்பதனால் கடனுக்கான வட்டி விகிதம் குறைக் கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் எஸ்பிஐ வங்கி இதனை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று முன் தின இரவு புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு கடன் களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். முக்கியமாக ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தி லிருந்து பாரத ஸ்டேட் வங்கி இதுவரை கடனுக்கான வட்டி விகி தத்தை 2 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதம் குறைப்பு மூலம் பெண்களுக்கான வீட்டுக் கடன் (ரூ.75 லட்சம் வரை) வட்டி விகிதம் 8.20 சதவீதமாக (எம்சிஎல்ஆர் விகிதத்தை விட 0.20 சதவீதம் அதிகம்) இருக்கும். இது முன்னதாக 9.10 சதவீதமாக இருந்தது. மற்ற பிரிவினருக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருக்கும். அதேபோல் யூனியன் வங்கியும் பல கால அளவுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை 0.65 சதவீதம் முதல் 0.90 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஐடிபிஐ, எஸ்பிடி வட்டிக் குறைப்பு எஸ்பிஐ மற்றும் யூனியன் வங்கியை போன்று ஐடிபிஐ வங்கியும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 0.60 சதவீதம் வரை குறைத்திருக்கிறது. நேற்று முதல் இந்த வட்டி குறைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கான எம்.சிஎல்ஆர் விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 9.30 சதவீதமாக இருக்கிறது. எஸ்பிஐ துணை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் எம்சிஎல்ஆர் விகிதத்தை அதிக பட்சம் 0.3 சதவீதம் வரை குறைந் துள்ளது. ஒரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 9.45 சதவீதத்திலிருந்து 9.20 சதவீதமாக குறைத்துள்ளது. அதேபோல ஒரு மாதம், மூன்று மாதம் மற்றும் ஆறு மாத காலத்திற்கான அனைத்து கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் வட்டி விகித குறைப்பை ரிசர்வ் வங்கி வரவேற் றுள்ளது. 2015-ம் ஆண்டிலிருந்து வட்டி விகிதத்தை 175 அடிப்படை புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ஆனால் வங்கி கள் கடனுக்கான வட்டி விகிதத்தை மெதுவாக குறைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.Comments