>> | >> | > | >> |
---|---|---|---|
>> | Employment Type | : | Govt Job |
>> | Application | : | OFFLINE |
>> | Website | : | http://www.aees.gov.in/htmldoc |
>> | Name of the Post | : | PGT-GT-SPECIAL TEACHERS |
>> | கல்வித் தகுதி | : | AS PER NORMS |
>> | காலியிடங்கள் | : | MANY |
>> | சம்பளம் | : | Rs. 9300-Rs 34800 plus Grade Pay Rs. 4800/- |
>> | தேர்வு செய்யப்படும் முறை | : | WRITTEN EXAM |
>> | கடைசித் தேதி | : | 22.02.2017 |
>> | தேர்வு நாள் | : | LATER |
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai
Tuesday, January 31, 2017
TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | பிளஸ்-2 தேர்வு வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து கடந்த 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பதிவிறக்கம் செய்யும் தேதி பிப்ரவரி 2-ந்தேதி என்று நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
>> | >> | > | >> |
---|---|---|---|
>> | Employment Type | : | Govt Job |
>> | Application | : | OFFLINE |
>> | Website | : | http://www.aees.gov.in/htmldoc |
>> | Name of the Post | : | GENERAL MANAGER |
>> | கல்வித் தகுதி | : | AS PER NORMS |
>> | காலியிடங்கள் | : | 1 |
>> | சம்பளம் | : | Rs.15600-Rs39100+Grade Pay Rs. 7600 |
>> | தேர்வு செய்யப்படும் முறை | : | MERIT |
>> | கடைசித் தேதி | : | 10.02.2017 |
>> | தேர்வு நாள் | : | LATER |
TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக துறைசார் பொறியியல் கல் லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான். எம்.ஆர்க். இடங்கள் "டான்செட்" பொது நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 2017-18-ம் கல்வி ஆண்டில் எம்சிஏ, எம்பிஏ படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25-ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியும் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் இணைய தளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஹால்டிக்கெட்டையும் இணையதளத்தில் இருந்துதான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா? | "எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது," என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது. அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது | சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 4-ந் தேதி (சனிக் கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 4-ந் தேதி (சனிக்கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. இதனையொட்டி சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக்கம் சாலை) ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் வரும் 4-ந் தேதி (சனிக்கிழமை) வழக்கம் போல் செயல்படும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல் பெற்றுக்கொள்ளப்படும். சுமார் 2 ஆயிரத்து 400 விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு மேளாவின் மூலம் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக்கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த மேளாவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட ஏ.ஆர்.என். பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களை அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பம், காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) பிரிவிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். இந்த மேளாவில் தட்கல் (உடனடி பாஸ்போர்ட்) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த மேளாவிற்கான சந்திப்பு முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு திறக்கப்படும். மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். நிறுத்திவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்ய வருபவர்கள் இந்த மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா? | பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். 2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 4-வது முறை ஆகும். இந்த ஆண்டு பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. அதாவது பொது பட்ஜெட்டின் ஒரு அங்கமாக ரெயில்வே பட்ஜெட் இருக்கும். பட்ஜெட் உரையின் போது புதிய வரிகள், வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிடுவார். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்கும் வகையிலும் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 15 சதவீதமாக இருக்கும் சேவை வரி உயர்த்தப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். வேளாண்மை, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும், நவீன உத்திகளுடன் புதிய நிறுவனங்களை தொடங்குவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான திட்டங்களையும் அருண் ஜெட்லி அறிவிப்பார் என்று கருதப்படுகிறது. நாட்டில் விலைவாசி அதிகரித்து இருப்பதால் தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வற்புறுத்தி வருகிறார்கள். எனவே தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பு தற்போதுள்ள ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்கள் மத்தியில் நல்ல சூழ்நிலையை உருவாக்கவும், மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும் அருண் ஜெட்லி வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்துவார் என்று கருதப்படுகிறது. வீட்டுக்கடனுக்காக தற்போது செலுத்தப்படும் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை கழிவு உள்ளது. இந்த வட்டிக்கழிவு சலுகை ரூ.2½ லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும் மருத்துவ செலவுக்கான கழிவுத்தொகையும் உயர வாய்ப்பு இருக்கிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கிராமப்புற பொருளாதாத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள், பெண்கள் நலனுக்கான திட்டங்களும், கல்வி, சுகாதாரம் போன்ற சமூக துறைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் | தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், கடந்த 21-ம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆளுநர் உரையுடன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில், திருத்தச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார். பின்னர் அன்றைய தினமே, 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு | தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அடுத்த 3 ஆண்டு களுக்கு கல்வி கட்டணத்தை திருத்தியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறது. தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையிலான இடங்கள் அரசு ஒதுக்கீடு மூலமாகவும், எஞ்சிய இடங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் மூலமாகவும் நிரப்பப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப் படும் பிஇ, பிடெக், பி.ஆர்க். இடங்களுக்கும் அதேபோல், எம்இ, எம்டெக், எம்ஆர்க் மற்றும் எம்பிஏ, எம்சிஏ இடங்களுக்கும் நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையிலான சுயநிதி தொழிற் கல்லூரி கல்விக்கட்டண நிர்ணயக் குழு கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில், கடந்த 2013-14-ம் ஆண்டில் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அது நடப்பு கல்வி ஆண்டு (2016-17) வரையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுயநிதி பொறி யியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டு களுக்கு கல்விக்கட்ட ணத்தை திருத்தியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகங்கள் எதிர்பார்க்கும் உத்தேச கல்விக்கட்டண விவரங்களை தேவையான ஆவணங்களுடன் பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி பொறி யியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அக்கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு கல்லூரியிடமிருந்தும் பெறப்படும் கல்விக்கட்டண விவரங்கள் ஆய்வுசெய்யப்பட்டு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக் கப்படும் என்று கமிட்டியின் உயர் அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறினார். புதிய கட்டணம் நிர்ணயிக்கப் படுவதை தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் அதிகரிக்கும். கல்விக்கட்டணத்தில் டியூஷன் கட்டணம், மாணவர் சேர்க்கை கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வகம், கணினி, இண்டர்நெட், நூலகம், விளை யாட்டு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களும் அடங்கும். தற்போது வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் பிஇ, பிடெக் ("நாக்" அங்கீகாரம்) ரூ.45,000 (ஓராண்டுக்கு) பிஇ, பிடெக் (சாதாரணம்) ரூ.40,000 (ஓராண்டுக்கு) எம்இ, எம்டெக் (நாக் அங்கீ காரம்) ரூ.30,000 (ஓராண்டுக்கு) எம்இ, எம்டெக் (சாதாரணம்) ரூ.25,000 (ஓராண்டுக்கு) எம்பிஏ, எம்சிஏ (நாக் அங்கீகாரம்) 18,000 (ஒரு செமஸ் டருக்கு) எம்பிஏ, எம்சிஏ (சாதாரணம்) ரூ.15,000 (ஒரு செமஸ்டருக்கு)
ஏப்ரலுக்கு பிறகே தேர்தலை நடத்த முடியும் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் வரை நீட்டிப்பு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
ஏப்ரலுக்கு பிறகே தேர்தலை நடத்த முடியும் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் வரை நீட்டிப்பு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் | உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் வரை நீட்டிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுவதால் அதன் பிறகே உள்ளாட்சித் தேர் தலை நடத்த முடியும் என அந்த மசோதாவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்ட வணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதித்தது. எனவே, உள்ளாட்சி அமைப்பு களின் நிர்வாகத்தை கவனிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது சட்டப்பேரவைக் கூட் டம் நடைபெறாததால் கடந்த அக்டோபர் 17-ம் தேதி இதற் கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பள்ளிக் கட்டிடங்களையும், ஆசிரியர்களையும் உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது. ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் முடிவடைந்த பிறகே தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுறுவதை கணக்கில்கொண்டு அவர்களது பதவிக் காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்து கடந்த டிசம்பர் 27-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தமிழ்நாடு ஊராட்சி திருத்தச் சட்ட மசோதா பேர வையில் அறிமுகம் செய்யப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பள்ளிக் கட்டிடங்களையும், ஆசிரியர்களையும் உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது.
Subscribe to:
Posts (Atom)