-->

Saturday, June 24, 2017

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது


மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது | எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகிக்கப்படும் என்றும், கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்கும் என்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் 'வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்' என்றார்  DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, June 23, 2017

NEET 2017 RESULT | நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று (23.06.2017) வெளியிடப்பட்டன.



நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியீடு! | கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று (23.06.2017) வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் சிபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் மாணவர்கள் அறியலாம். இந்திய அளவில் முதலிடம் 697/720 விரைவில் வெளியாகிறது தமிழக மாணவர்கள் ரேங்கிங் பட்டியல் ஒரு வாரத்தில் விண்ணப்பம். மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஒரு வாரத்தில் வழங்கப்படும்த என தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புககளுக்கான கலந்தாய்வு தொடங்கிய பின்பே தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம் 30-ம் தேதி கடைசி நாள்


பி.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம் 30-ம் தேதி கடைசி நாள் | தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14 அரசு உதவி பெறும் கல்வி யியல் கல்லூரிகளிலும் உள்ள பிஎட் இடங்களில் 1,777 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன. இதில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 21-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் லெடி வெலிங் டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனம் உட்பட 13 கல்வியியல் கல்லூரி களில் வரும் 30-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழ் நகலை சுயசான்றொப்பமிட்டு இந்த சலுகை கட்டணத்தில் விண் ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் ஜூலை 3-ம் தேதிக்குள் 'செயலர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை-2017, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005' என்ற முக வரிக்கு அனுப்ப வேண்டும். கல் வித்தகுதி, தேர்வுமுறை, வெயிட் டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட இதர விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

| பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


காலஅவகாசம் நீட்டிப்பு: பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு | பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில், பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பொருட்டும், 11-வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துதல் சார்ந்தும் தமிழக அரசால் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் பங்குபெற ஆர்வம் தெரிவிக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் ( www.tnscert.org) விவரங்களை 23-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது இப்பணிக்காக பதிவு செய்வதற்கான காலம் ஜூலை 2-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் ஆர்வலர்கள், இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த, பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டச் சீரமைப்பு அறிக்கைகள் (கோத்தாரி குழுவின் அறிக்கை, தேசியக் கலைத்திட்ட வரைவு 2005 மற்றும் புதிய கல்விக்கொள்கை (வரைவு) 2017-18), ஆகியவற்றில் கருத்துச் செறிவு பெற்றிருத்தல் நலம். ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பணியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந்தேதி வெளியீடு


கலந்தாய்வு ஜூலை 19-ந்தேதி தொடங்குகிறது கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந்தேதி வெளியீடு துணைவேந்தர் பேட்டி | கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படும் என்றும், கலந்தாய்வு ஜூலை 19-ந்தேதி தொடங்குவதாகவும் துணைவேந்தர் திலகர் கூறினார். நாமக்கல்லில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் குறித்த பட்டப்படிப்பு மற்றும் 3 தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் என மொத்தம் 4 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. கால்நடை மருத்துவ படிப்பிற்கு இந்த ஆண்டு 23 ஆயிரம் பேர் ஆன்-லைனில் விண்ணப்பித்து உள்ளனர். தற்போது விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது, வருகிற 30-ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு வருகிற (ஜூலை) 19-ந்தேதி தொடங்கி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். மொத்தம் 380 மாணவர்கள் சேர்க்கப்படுவர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டில் விண்ணப்பித்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு புதிய படிப்பு எதுவும் இல்லை. அதேபோல புதிய கல்லூரிக்கும் வாய்ப்பு இல்லை. தனியார் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் திட்டமும் இல்லை. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முடியாத நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு. மருத்துவ கலந்தாய்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.


என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு தள்ளிவைப்பு | என்ஜினீயரிங் படிப்புக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவ கலந்தாய்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ரேங்க் பட்டியல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 584 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்தனர். இதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 988 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். அவர்களில் ஆண்கள் 85 ஆயிரத்து 950. பெண்கள் 51 ஆயிரத்து 38 ஆகும். விண்ணப்பித்தவர்களில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 1,146 பேரும், மாற்றுத்திறனாளிகள் 227 பேரும், விளையாட்டு மாணவர்கள் 2,082 பேரும் உள்ளடங்குவர். 70 ஆயிரத்து 769 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். கடந்த 20-ந்தேதி 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டது. ரேங்க் (தரவரிசை) பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- கலந்தாய்வு தள்ளிவைப்பு என்ஜினீயரிங் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு 27-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. மருத்துவ கலந்தாய்வு தொடங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுத்து அறிவித்த பின்னர், என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும். தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து 59 பேர் உள்ளனர். அவர்களில் 36 பேர் 'நீட்' தேர்வு முடிவை எதிர்பார்த்து உள்ளனர். அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 199 கட்-ஆப் மதிப்பெண்ணில் 811 பேர் உள்ளனர். அவர்களில் 645 பேர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 198 கட்-ஆப் மதிப்பெண்ணில் 2,097 பேர் உள்ளனர், அதில் 1,681 பேர் மருத்துவம் செல்ல வாய்ப்பு உள்ளது. 197 கட்-ஆப் மதிப்பெண்ணில் 3,766 பேர் உள்ளனர். இவர்களில் 3,016 பேர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவ கலந்தாய்வுக்கு முன்பாக என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தினால் என்ஜினீயரிங் தேர்வு செய்த பலர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும். அதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. மறுகூட்டல் முடிவு இன்று (23.06.2017) வெளியீடு


எஸ்.எஸ்.எல்.சி. மறுகூட்டல் முடிவு இன்று (23.06.2017) வெளியீடு | கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்று பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் பலர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு மறுகூட்டல் முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் தற்காலிக சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு எந்த வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, June 20, 2017

TN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

TN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு | தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் உட்பட 15,664 பேருக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. காலியாக உள்ள 15,664 பணியிடங்களுக்கு 5 லட்சத்து 80000 பேர் தேர்வு எழுதினர்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் 3 லட்சம் பயிற்றுநர்களுக்கு பற்றாக்குறை அசோசேம் ஆய்வில் தகவல்

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் 3 லட்சம் பயிற்றுநர்களுக்கு பற்றாக்குறை அசோசேம் ஆய்வில் தகவல் | இந்தியாவில் 3 லட்சம் யோகா ப யிற்றுநர்களுக்கு பற்றாக்குறை உள்ளது என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் கூறியுள் ளது. மேலும் முன்னெப்போதையும் விட தற்போது யோகா பயிற்றுநர் களின் தேவை அதிகரித்துள்ளது என்றும், 5 லட்சம் யோகா பயிற்று நர்கள் தேவையாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. அசோசேம் வெளியிட்டுள்ள ஆய்வில் கூறியுள்ளதாவது: சர்வதேச யோகா தினம் கடை பிடிக்கத் தொடங்கியதன் காரண மாக யோகா கற்றுக் கொள்வது பிரபலமடைந்து வருகிறது. உடல்நலத்தை கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ள மக்கள் இதை கற்றுக் கொள்கின்றனர். உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருவதால் தற்போது இதை பயிற்றுவிப்பதற்கான பயிற்றுநர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த ஆய்வை அசோசேம் வெளியிட்டுள்ளது. பிரபலங்கள் யோகா கற்றுக் கொடுப்பது அதிகரித்து வருவதால் லாபகரமான தொழிலாகவும் மாறியுள்ளது. யோகா கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை பொறுத்து பல்வேறு அளவில் கட்டணங்களை பெறுகின்றனர். தற்போது நாடு முழுவதும் மக்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக யோகாவை பார்க்கத் தொடங்கியுள்ளதால், யோகா வகுப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கென தனியாக பயிற்சி மையங்கள் தொடங்குவதும் அதிகரித்துள்ளது. யோகா ஆசிரியர்களைப் பொறுத்து நீண்ட காலம், குறுகிய கால அளவில் வகுப்புகள் நடக்கின்றன. பெருவாரியான மக்கள் குறுகிய கால வகுப்புகளுக்குக் கட்டணமாக மாதத்துக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அளிப்பதற்கும் தயாராக உள்ளனர். இதை தங்களது உடல் நலனுக்கான முதலீடாகவே பார்க்கின்றனர் என்றும் ஆய்வு கூறுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், கார்பரேட் நிறுவனங்கள், மருத்துவ மனைகள் என பல இடங்களிலும் தற்போது யோகாவுக்கென தனி துறை உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல் லாத வகையில் தெற்காசிய மற்றும் இந்தியாவில் யோகா பயிற்றுநர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா பயிற்றுநர்கள் சென்றுள்ளனர் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பினாமி சொத்துகளை கண்டுபிடிக்க ஆதாருடன் நிலப் பதிவுகளை இணைப்பது கட்டாயம் தயாராக இருக்கும்படி மாநில அரசுகளுக்கு கடிதம்

பினாமி சொத்துகளை கண்டுபிடிக்க ஆதாருடன் நிலப் பதிவுகளை இணைப்பது கட்டாயம் தயாராக இருக்கும்படி மாநில அரசுகளுக்கு கடிதம் | பினாமி சொத்துகளைக் கண்டு பிடிக்க நிலப் பதிவுகளையும் ஆதார் அடையாள எண்ணுடன் இணைக்க தயாராகும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வங்கி கணக்குகளைக் தொடங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்ட நிலை யில், நிலப் பதிவுகளையும் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் நிலப் பதிவுகளை டிஜிட்டல்மயமாக்கும் படி அனைத்து மாநில அரசு களுக்கும் கடிதம் எழுதி கேட்டுக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவு கள் நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்ப தாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலப் பதிவுகள் உரிமையாளரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படு வதன் மூலம் பினாமி சொத்து களை அம்பலப்படுத்த முடியும் என்றும் இதன் மூலம் நிலப் பதிவு களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வர முடியும் என்றும் மத்திய அரசு நம்புவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் சொத்துகள் இணைக்கப்படுவதால், அதன் உரிமையாளரைக் கண்டுபிடிப்பது அதிகாரிகளுக்கு எளிமையாகி விடும். ஆரம்ப கட்ட விசாரணை யின்போதே, அந்த நிலம் உண்மை யான உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது பினாமி பெயரில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் வங்கி கடன் வழங்குவது மற்றும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கும் பணிகளிலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது. இதன் காரணமாக கடந்த 1950-ம் ஆண்டு முதலான நிலம் (விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத) வீடுகள் (தனிப்பட்ட நபர்கள் அல்லது சங்கத்துக்கு சொந்தமான) உட்பட அசையா சொத்துகளை விற்றது, வாங்கி யது தொடர்பான பதிவுகள், நிலப் பதிவுகள் ஆகியவற்றை ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் டிஜிட்டல்மய மாக்க வேண்டும் என உத்தரவிட்டு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், 'சொத்து களுடன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் ஆதாருடன் இணைக்கப்படாத சொத்துகளின் உரிமையாளர்கள் மீது பினாமி பரிவர்த்தனை (தடை) திருத்தச் சட்டம் 2016-ன் கீழ் உரிய நட வடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் கடந்த 15-ம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செய லாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், டெல்லி துணை நிலை ஆளுநர், நிதி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துகளை நேரடியாக பிரதமர் அலுவலகத் துக்கு கடிதமாக அனுப்பி வைக்கும் படியும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு மறுப்பு மத்திய அரசின் பத்திரிகை தகவல் மைய செய்தித் தொடர் பாளர் பிராக் நோரன்ஹா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், 'நிலஆவணங்களில் ஆதாரை இணைப்பது கட்டாயமா கிறது என்று வெளியான சுற்றறிக்கை போலியானது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DGE - SSLC JUN/JULY 2017 - PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD | எஸ்எஸ்எல்சி துணை தேர்வுக்கு அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Directorate of Government Examinations - SSLC Jun/July 2017 - Private Candidate Hall Ticket download instructions | எஸ்எஸ்எல்சி துணை தேர்வுக்கு அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். | அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன், ஜூலை மாதம் நடை பெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு எழுத அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப் பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உள்பட) தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் செய் முறைத் தேர்வு அடங்கிய அறிவி யல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 15-க்கு குறை வாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண் டும் செய்ய வேண்டும். அதோடு எழுத்துத் தேர்விலும் கலந்து கொள்ள வேண்டும். மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் ஜூன், ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வை எழுத வேண்டும். அதோடு அறிவியல் பாட கருத்தியல் தேர்வையும் மீண் டும் கண்டிப்பாக எழுத வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNEA 2017 Random Number and Rank Publication |பொறியியல் படிப்புக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பம் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு.

TNEA 2017 Random Number and Rank Publication | பொறியியல் படிப்புக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பம் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு.  | பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகளுக்கு கணினி மூலம் இன்று செவ்வாய்க்கிழமை (20.06.17) ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 17 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உட்பட மொத்தம் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (20.06.17) கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. ரேண்டம் எண் என்பது கணினி மூலம் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் 16 இலக்க எண் ஆகும். பொறியியல் படிப்புக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிப்பதால் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அத்தகைய சூழலில், கலந்தாய்வின்போது யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வினா எழலாம். அப்போது, முதலில் கணித மதிப்பெண் பார்க்கப்படும். அதில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவர் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். ஒருவேளை கணித மதிப்பெண் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணும் அதுவும் சமமாக இருப்பின் மாணவர்களின் முக்கிய பாடமும் (உயிரியல், கணினி அறிவியல்) அதுவும் சமமாக இருந்தால் பிறந்த தேதியும் பார்ப்பார்கள். எதிர்பாராவிதமாக பிறந்த தேதியும் ஒன்றுபோல் அமைந்தால், கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் பார்க்கப்படும். அப்போது, யாருடைய ரேண்டம் எண்ணின் மதிப்பு குறைவாக இருக்கிறதோ அவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவர்களுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (20.06.17) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்ட அடுத்த சில விநாடிகளில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டு தங்களுக்குரிய ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை பட்டதாரிகள் பிஎட் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி தேவையில்லை இந்த ஆண்டு புதிய நடைமுறை அமல்

முதுகலை பட்டதாரிகள் பிஎட் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி தேவையில்லை இந்த ஆண்டு புதிய நடைமுறை அமல் | இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறவில்லை என்றாலும் முதுகலை படிப்பு படித்திருந் தால் அவர்கள் தாராளமாக பிஎட் படிப்பில் சேரலாம். இப்புதிய நடைமுறை இந்த ஆண்டிலி ருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது. பிஎட் படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். (பொருளாதாரம், வணிக வியல், சமூகவியல், உளவியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடங் களுக்கு மட்டும் முதுகலை பட்டப் படிப்பு அவசியம்). பிஎட் மாணவர் சேர்க்கைக்கு பட்டப் படிப்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித் தனியே குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக் கிறது. அதன்படி, பொதுப் பிரிவினர் எனில் 50 சதவீதமும், பிசி வகுப்பினர் எனில் 45 சதவீதமும், எம்பிசி பிரிவினர் என்றால் 43 சதவீதமும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறவில்லை என்ற போதிலும் அவர்கள் முதுகலை பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவர்களும் பிஎட் சேரும் வண்ணம் புதிய நடைமுறை 2017-18-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎட் படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் பெற வில்லை என்றாலும் ஒருவேளை அவர்கள் அந்த பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பின் அவர்கள் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் மாணவர் சேர்க்கையின்போது குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி என்ற பிரச்சினை எழுவதில்லை. காரணம், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்ணைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே கலந்தாய்வில் இடம் கிடைக்கும் நிலை உள்ளது. புதிய நடைமுறையால், தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில், மதிப்பெண் குறைவாக பெற் றவர்களும் பிஎட் படிப்பில் சேர முடியும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். பொறியியல் பட்டதாரிகள் இட ஒதுக்கீடு 10 சதவீதமாக குறைப்பு கலை அறிவியல் பட்டதாரிகளைப் போன்று பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரும் முறை கடந்த 2015-16-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு எந்த விதமான இட ஒதுக்கீடும் அளிக்கப்படவில்லை. அவர்கள் கணிதம், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பிஎட் படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டனர். 2016-17-ம் கல்வி ஆண்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளில் வழங்கப்படும் பிஎட் இடங்களில் 20 சதவீத இடங்கள் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த சிறப்பு இட ஒதுக்கீடு காரணமாக தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என பிஎஸ்சி பட்டதாரிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, அரசு மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் பட்டதாரிகளுக்கு மொத்தம் 240 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பிஎட் படிப்புக்கு பொறியியல் பட்டதாரிகள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக இருப்பதே பொறியியல் பட்டதாரிகள் பிஎட் சேர ஆர்வம் காட்டாததற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர் கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், பொறியியல் பட்டதாரிகளுக்கான இட ஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது-ஜெ.கு.லிஸ்பன் குமார்  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு | பிஹார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் (71), தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவார் என பாஜக தலைவர் அமித் ஷா நேற்று அறிவித்தார். இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய வரும் 28-ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தத் தேர்தலில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்தது. இது தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகிய 3 பேர் கொண்ட குழுவை பாஜக தலைவர் அமித் ஷா அமைத்தார். இக்குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை கடந்த வாரம் நேரில் சந்தித்துப் பேசினர். மேலும் மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்களுடனும் இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதுபோல, பாஜகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அமித் ஷா சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க, பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடத்திய ஆலோசனை குறித்து மூவர் குழு எடுத்துக் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமித் ஷா கூறும்போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஹார் ஆளுந ராக உள்ள ராம்நாத் கோவிந்த் போட்டியிடுவார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார். தலித் மற்றும் பழங்குடியினர் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் ராம்நாத் அயராது பாடுபட்டுள்ளார். வரும் 23-ம் தேதி அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வார். அனைத்து கட்சியினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாள ராக அவர் இருப்பார் என்று நம்புகிறேன்" என்றார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ராம்நாத் கோவிந்த், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து 2 முறை மாநிலங்களவை உறுப்பி னராகவும், நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழு உறுப்பின ராகவும் பதவி வகித்துள்ளார். பாஜகவின் தலித் மற்றும் பழங்குடி யினர் பிரிவின் தேசிய தலைவ ராகவும் பதவி வகித்துள்ளார். ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்தப் பதவியை எட்டிப் பிடித்த 2-வது தலித் சமூகத்தினர் என்ற பெருமையை பெறுவார். நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவராக கேரளா வைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | தமிழக சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ், உயர் கல்வித்துறை தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டிடங்கள், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடங்கள்" என்ற பெயரில் அழைக்கப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18-ம் கல்வியாண்டில் துவங்கப்படும். இதற்காக அரசுக்கு 100 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் இருந்து 268 புதிய பாடப்பிரிவுகள் (60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்பாடப்பிரிவுகளை கையாள 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டிற்கு 40 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடியில் புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடியில் புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ், பள்ளி கல்வித்துறை தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப்பள்ளி மாணவர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த கட்டிடம் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்" என்ற பெயரில் அழைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, June 18, 2017

பிஎட் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா அறிவித்துள்ளார்.

பி.எட். படிப்புக்கு ஜூன் 21-ம் தேதி முதல் விண்ணப்பம் கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு | பிஎட் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: 2017-2018-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள பிஎட் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான விண் ணப்பங்கள் ஜூன் 21 முதல் 30-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) பின்வரும் கல்வியியல் கல்லூரி களில் வழங்கப்படும். எங்கெங்கு கிடைக்கும்? சென்னை சைதாப்பேட்டை கல் வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்த நாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, திரு நெல்வேலி பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கல்வி யியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வி யியல் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500. கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும். அவர்கள் சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப் படமாட்டாது. நேரில் மட்டுமே வழங்கப்படும். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை "செயலர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை-2017, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறு வனம், காமராஜர் சாலை, திரு வல்லிக்கேணி, சென்னை-600 005" என்ற முகவரிக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிவிப்பி்ல் கூறப்பட்டுள்ளது  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, June 17, 2017

TRB GOVT POLYTECHNIC LECTURER NOTIFICATION | VACANCIES:1058 | EXAM DATE:13.08.17 | ONLINE APPLY LAST DATE: 07.07.17

TRB GOVT POLYTECHNIC LECTURER NOTIFICATION  | VACANCIES:1058 | EXAM DATE:13.08.17 | ONLINE APPLY LAST DATE: 07.07.17 | Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt.Polytechnic Colleges for the year 2017 -18 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள்: தேர்வு நாள்: 13/08/2017 விண்ணப்பிப்பதற்கான தேதி: 17/06/2017 முதல் 07/07/2017  DOWNLOAD-ENG DOWNLOAD-TAMIL DOWNLOAD-SYLLABUS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, June 16, 2017

PG TRB HALL TICKET PUBLISHED | DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS FOR THE YEAR 2015 - 16 AND 2016 - 17 - PLEASE CLICK HERE FOR HALL TICKET DOWNLOAD

PG TRB HALL TICKET PUBLISHED | DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS FOR THE YEAR 2015 - 16 AND 2016 - 17 - PLEASE CLICK HERE FOR HALL TICKET DOWNLOAD | Direct Recruitment of Post Graduate Assistants for the year 2015 - 16 and 2016 - 17 - Please click here for Hall Ticket Download | TRB issued Notification for the Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade - I vide Advertisement No.03/2017, dated 09.05.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination. It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to all applicants is purely provisional and does not confer any acceptance of their claim in the application. Issuing the Hall Tickets and permitting the candidates to sit for the examination does not mean that their application forms have been accepted by the Board. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment. Some of the applications received by the board do not have the candidate's photograph. The Board has provisionally admitted such candidates and uploaded their hall tickets without photograph. These candidates are advised to download the form herein and fill in the details, affix a recent passport size colour photograph and get it attested by a Gazetted Officer. The same must be handed over to the exam hall supervisor at the time of examination, along with a stamp size colour photograph  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

SSLC அறிவியல் செய்முறைத் தேர்வு ஜூன் 22, 23-ல் நடைபெறும் எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை பொதுத் தேர்வு அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர் வெழுதி, அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு 80 சத வீதம் வருகை தந்து, ஆனால் செய்முறைத்தேர்வில் கலந்து கொள்ள தவறிய பள்ளி மாண வர்கள், தனித்தேர்வர்கள் ஜூன் 22, 23 (வியாழன், வெள்ளி) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள சிறப்பு துணை பொதுத்தேர்வின் அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இதுகுறித்த முழு விவரங் களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தனிப்பட்ட முறையில், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு இதுகுறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப் படாது இவ்வாறு அவர் கூறியுள்ளார்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் இன்று (16.06.2017) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் இன்று (16.06.2017) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் | பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. அந்த தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்து தேர்விற்கும் வரவேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வருகை தர வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NEET 2017 தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு

NEET 2017 தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு | இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 'நீட்' என்ற தேசிய தகுதி தேர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 7-ந்தேதி இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 12 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தமிழகத்தில் 85 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவால் தேர்வு முடிவு வெளியாவது தள்ளிப்போனது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீட் தேர்வு முடிவு விரைவில் வெளியிட உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை சி.பி.எஸ்.இ. நிறுவனம் இணையதளத்தில் ( www.cbseneet.nic.in ) வெளியிட்டுள்ளது DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

TNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த நாள்குறிப்பு வெளியாகியுள்ளது. >>தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. >>ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. >>மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித் துறையில் 43 புதிய அறிவிப்புக்களை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்...விரிவான விவரங்கள்...

பள்ளிக்கல்வித் துறையில் 43 புதிய அறிவிப்புக்களை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்...விரிவான விவரங்கள்... 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு "புதுமைப் பள்ளி" விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும். 3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும். 4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும். 5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும். 6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும். ஆசிரியர் நலன் 7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ். 9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம். 10) சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி மேலும் படிக்க DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, June 14, 2017

TAMIL NADU HOUSING BOARD | RECRUITMENT NOTIFICATION | TNHB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2017



TAMIL NADU HOUSING BOARD | RECRUITMENT NOTIFICATION | NOTIFICATION No.1/2017 DATED: 08.06.2017 | Applications are invited from the eligible candidates of Tamil Nadu native only through ONLINE MODE from 10.06.2017 to 30.06.2017 for Direct Recruitment to the various Categories of Posts | DOWNLOAD

IMPORTANT DATES:

i)Date of Notification 08.06.2017

ii) Date of commencement of online Registration of Application 10.06.2017

iii) Last date for Registration of online application and payment of fee (Application can't be registered after this date) 30.06.2017

iv) Last date of Submission of corrected application 03.07.2017

v) Date and Time of Written ExaminationThe Competitive Written Examination will be conducted as per TANCET norms by Anna University, Chennai-25, during the Month of August' 2017. The exact date and time of competitive written examination will be hosted in the website: www.tnhbrecruitment.in Candidates shall download the Hall Tickets. Separate Hall Ticket will not be sent.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, June 13, 2017

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி இன்றும் (13.6.2017) விடைகள் 15-ம் தேதியும் வெளியாகும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

15-ம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு விடைகள் | மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி இன்றும் விடைகள் 15-ம் தேதியும் வெளியாகும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்திருந்தது. இந்தத் தடைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்ததுடன், தேர்வு முடிவை வெளியிட அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி சிபிஎஸ்இ இணையதளத்தில் 3 நாட்களுக்கு வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 நாட்களுக்கு மட்டுமே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 13-ம் தேதி (இன்று) ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி வெளியிடப் படும். இதில் ஆட்சேபனை இருந்தால் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் வழியாக தெரிவிக்க வேண்டும். இதையடுத்து நீட் தேர்வுக்கான விடைகள் ஜூன் 15-ம் தேதி வெளியிடப்படும். இதில் ஆட்சேபனை இருந்தால் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள் அதை தெரிவிக்க வேண்டும். இந்த 2 நடைமுறைகளும் முடிந்த பிறகு ஒரு வாரத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CSIR UGC NET ADMIT CARD 2017 DOWNLOAD | நெட் தேர்வுக்கு வி்ண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிஎஸ்ஐஆர் 'நெட்' தேர்வுக்கு ஹால்டிக்கெட் சென்னை இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த படிப்புகளில் உதவிப் பேராசிரியர் ஆவதற்கான 'நெட்' தகுதித்தேர்வை சிஎஸ்ஐஆர் அமைப்பு ஆண்டுக்கு 2 முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான முதலாவது 'நெட்' தேர்வு ஜூன் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் சென்னை, காரைக்குடி உட்பட நாடு முழுவதும் மொத்தம் 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 'நெட்' தேர்வுக்கு வி்ண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணமும் அத்தகைய விண்ணப்பதாரர்களின் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவப் படிப்புக்கு விரைவில் விண்ணப்ப விநியோகம் மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தகவல்

மருத்துவப் படிப்புக்கு விரைவில் விண்ணப்ப விநியோகம் மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல் | நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படுகிறது. தமிழக அரசு உத்தரவிட்டதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) முடிவுகள் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வரும் 26-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. இதை யடுத்து விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 65 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை சிபிஎஸ்இ நாடுமுழுவதும் கடந்த மே மாதம் 7-ம் தேதி நடத்தியது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் உட்பட நாடுமுழுவதும் 103 நகரங்களில் 1,921 மையங்களில் தேர்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டும் நடந்த நீட் தேர்வு, இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாம், வங்காளம் ஆகிய 10 மொழிகளில் நடந்தது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 95 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். ஜூன் மாதம் 8-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோவிடம் கேட்ட போது, "மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் மற்றும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் 2 விதமான விண்ணப்பங்கள், வழிகாட்டி கையேடுகள் தயார் நிலையில் உள்ளன. நீட் தேர்வு முடிவுகள் வெளி யானதும், தமிழக அரசு எந்த அடிப் படையில் மாணவர் சேர்க்கை என்பதை அறிவிக்கிறதோ அதற்கு ஏற்ப விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டி கையேடுகள் விநி யோகிக்கப்படும்" என்றார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) முடிவுகள் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றம், தேர்வு முடிவுகளை வரும் 26-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை பணியில் காலதாமதம் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு.

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை பணியில் காலதாமதம் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு | 'நீட்' நுழைவுத்தேர்வு விவகாரம் காரணமாக, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைப் பணியில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு திட்ட மிட்டபடி ஜூன் 27-ம் தேதி தொடங் குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 844 பேர் விண்ணப் பம் சமர்ப்பித்துள்ளனர். பொறி யியல் படிப்புக்கு விண்ணப்பித் தவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22-ம் தேதி தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்றும், முதல்கட்ட கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. எம்பிபிஎஸ் படிப்புக்கான கலந் தாய்வு முடிந்த பின்னர் பொறியி யல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நீட் நுழைவுத்தேர்வு விவகாரம் காரணமாக மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஆகிவருகிறது. நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஎஸ்இ-க்கு இடைக்கால தடை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. எனினும், நீட் நுழைவுத்தேர்வு விவகாரம் காரணமாக மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் காலதாமதமாகி வருவதால், பொறியியல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டபடி ஜூன் 27-ம் தேதி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் பேராசிரியை இந்துமதியிடம் கேட்டபோது, "பொறியியல் படிப்புக்கு இறுதி நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஏற்கெனவே அறிவித்தபடி, ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும். தரவரிசைப்பட்டியல் 22-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீடு, வணிக நிறுவனங்களுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு ஜூலை 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்

வீடு, வணிக நிறுவனங்களுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு ஜூலை 1 முதல் புதிய திட்டம் தொடக்கம் | வீடு, வணிக நிறுவனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப் பித்தால் ஒரே நாளில் மின் இணைப்பு கொடுக்கும் புதிய திட்டத்தை மின் வாரியம் தொடங்கியுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி நேற்று கூறியதாவது: தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மத்திய அரசின் மின் துறை அமைச்சகத்துடன் இணைந்து 'மின்சார நண்பன்' என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற, கிராமப்புற மின் நுகர்வோருக்கு அவர்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள, ஏற்பட உள்ள மின் தடை, பராமரிப்புப் பணிகள் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் தெரிவிக்கப்படும். இதற்காக ஒரு கோடியே 60 லட்சம் மின் நுகர்வோரின் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் கணினி சேவை மையம் மூலம் மின்தடை குறித்த தகவல் சம்பந்தப்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்நுகர்வோரின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும், பொதுமக்களின் வசதிக்காக வீடு, வணிக உபயோகத்துக்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மின்இணைப்பு கோரும் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் மின் கம்பம் அல்லது மின்பகிர்மான பெட்டியில் இருந்து 100 அடிக்குள் இருந்தால் விண்ணப்பம் அளித்த அதே நாளில் மின்இணைப்பு கொடுக்கப்படும். மின்இணைப்பு கோரும் வீடு, வணிக இடமானது புதைவடம் (கேபிள்) இருக்கும் பகுதியில் அமைந்திருந்தால் விண்ணப்பம் அளித்த 48 மணி நேரத்துக்குள் மின்இணைப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.tangedco.gov.in என்ற இணைய தளம் மூலமோ, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் நேரடி யாகவோ விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப் பிக்கும்போது கட்டணங்களையும் அதிலேயே செலுத்தலாம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் மின் கம்பம் அல்லது மின்பகிர்மான பெட்டியில் இருந்து 100 அடிக்குள் இருந்தால் விண்ணப்பம் அளித்த அதே நாளில் மின்இணைப்பு கொடுக்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் கல்வியாளர்கள் பங்கு பெறலாம் என SCERT இயக்குனர் அறிவிப்பு.ஆர்வமுள்ளவர்கள் www.tnscert.org என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை வருகிற 23-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் கல்வியாளர்கள் பங்கு பெறலாம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் தகவல் | சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதுதொடர்பாக 22.5.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியையும், பாடப்புத்தகங்களை தயாரித்து வடிவமைக்கும் பணியையும் மேற்கொள்ள உள்ளது. அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்டு இந்த பணி செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணியில் பங்குபெற ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த கல்வி சீரமைப்பு அறிக்கைகளில் ஆழமான புரிதல் இருத்தல் வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் www.tnscert.org என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை வருகிற 23-ந் தேதிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது | CLICK
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடை ரத்து. வருகிற 26-ந்தேதிக்குள் நீட் தேர்வு முடிவு

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடை ரத்து. வருகிற 26-ந்தேதிக்குள் நீட் தேர்வு முடிவு | மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்வு முடிவை வெளியிடலாம் என்று உத்தரவிட்டது DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.