-->

Monday, October 31, 2016

தபால்துறையில் 310 தபால்காரர் பணியிடங்கள்-10-ம் வகுப்பு படிப்பு தகுதி

தபால்துறையில் 310 தபால்காரர் பணியிடங்கள்-10-ம் வகுப்பு படிப்பு தகுதி
தபால் துறையில் தபால்காரர் பணிக்கு 310 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-இந்தியாவின் மிகப்பெரிய மத்திய அரசுத் துறைகளில் தபால்துறையும் ஒன்று. இந்திய தபால்துறையின் தமிழ்நாடு தபால் வட்டத்தில் தற்போது தபால்காரர்/ மெயில்கார்டு பணிக்கு 310 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் தபால்காரர் பணிக்கு 304 இடங்களும், மெயில்கார்டு பணிக்கு 6 இடங்களும் உள்ளன. எந்தெந்த டிவிஷனில் எவ்வளவு பணியிடங்கள் உள்ளன என்ற விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் தபால்காரர் பணிக்கும், 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் மெயில் கார்டு பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
விருப்பம் உள்ளவர்கள் தேர்வுக் கட்டணம் (ரூ.400), விண்ணப்பக் கட்டணம் (ரூ.100) சேர்த்து மொத்தம் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் 15-11-2016-ந் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கியில் அதிகாரி பணி

வங்கியில் அதிகாரி பணி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 'சிறப்பு அதிகாரி-.டி.' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 23 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப பாடங்களில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. விருப்பம் உள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 9-11-2016.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கூடங்குளம் அணுஉலையில் வேலை

கூடங்குளம் அணுஉலையில் வேலை
இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி..எல். என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ், பல்வேறு அணுமின் நிறுவனங்கள் இயங்குகின்றன. தற்போது கூடங்குளம் அணுஉலையில் எச்.ஆர்., நிதி, கணக்கு, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவுகளில் அசிஸ்டன்ட் பணிகளும், ஸ்டெனோ பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது- 28, .பி.சி.- 16, எஸ்.சி.- 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.அறிவியல், கலை மற்றும் வர்த்தகம் சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஸ்டெனோகிராபர் பணிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறன் அவசியம். விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.இது பற்றிய விரிவான விவரங்களை www.npcil.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை இணைப்பது அவசியம். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 31-12-2016.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ‘அப்ரண்டிஸ்’ பணி

.டி.. படித்தவர்களுக்கு 'அப்ரண்டிஸ்' பணி
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக 'பெல்' (BHEL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது பெங்களூருவில் உள்ள பெல் நிறுவன கிளையில் .டி.. அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 386 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக எலக்ட்ரீசியன் பணிக்கு 125 இடங்களும், பிட்டர் பணிக்கு 95 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பணிக்கு 125 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர சிஸ்டம் அட்மின் அசிஸ்டன்ட், .சி. மெக்கானிக், டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், டூல் அண்ட் டை மேக்கர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற பிரிவிலும் கணிசமான பணிகள் உள்ளன.விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் .டி.. படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் குறிப்பிட்ட முகவரிக்கு நகல் விண்ணப்பத்தை தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் 12-11-2016-ந் தேதிக்குள்ளும், நகல் விண்ணப்பம் 15-11-2016-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.apprenticeship.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.


மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...

இந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...

விவசாய நலத்துறை:
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தில் இணை இயக்குனர் (கெமிஸ்ட்ரி) மற்றும் துணை இயக்குனர் (கெமிஸட்ரி) உள்ளிட்ட அதிகாரி பணிகளுக்கு 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேளாண்மை சார்ந்த ஆய்வுப்படிப்புடன் குறிப்பிட்ட பணிஅனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.agricoop.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். அறிவிப்பில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு அக்டோபர் 22-28 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கவும்.

உணவு தொழில்நுட்ப மையம் :
தேசிய உணவு தொழில்நுட்ப மையத்தில் துணை நூலகர், உதவி நூலகர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட கற்பித்தல் சாராத பணிகளுக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இது பற்றிய முழுமையான விவரங்களை www.niftem.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் 7-11-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ராணுவ டெப்போ :
பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ராணுவ டெப்போக்களில் ஒன்றான 221 கோய் .எஸ்.சி. ராணுவ டெப்போவில் 'குரூப்-சி' பணிக்கு 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தீயணைப்பு வீரர், மஸ்தூர், சபாய்வாலா போன்ற பணிகள் இதில் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்களை அக்டோபர் 21-28 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கவும்.

இர்கான்:
இந்திய ரெயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் 'சைட் சூப்பிரவைசர்(சிவில்)' பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பை முழு நேரபடிப்பாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை 9-11-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு www.ircon.org என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

உருக்காலை :
மேற்கு வங்காள மாநிலம் பர்ன்பூரில் செயல்படும் 'செயில்' உருக்காலை நிறுவனத்தில் டெபுடி மேனேஜர் (ஆபரேசன்ஸ், மெக்கானிக்கல்) பணியிடங் களுக்கு 24 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், புரொடக்சன், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு 4-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.