-->

Wednesday, December 28, 2016

TNPSC RECRUITMENT 2016 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - JAILOR | NO. OF VACANCIES 7 | LAST DATE 27.01.2017 | தேர்வு நாள் : 15.04.2017

ஜெயிலர் பணிக்கு ஏப்ரல் 15-ம் தேதி எழுத்துத் தேர்வு | தமிழக அரசின் சிறைத்துறையில் ஜெயிலர் பணியில் 7 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வு வரும் ஏப்ரல் 15-ல் நடத்த இருக்கிறது. ஜெயிலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்காண லுக்கு அழைக்கப்படுவர். இறுதி யாக எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் அடிப் படையில் ஜெயிலர் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேரடியாக ஜெயிலர் பணியில் சேருவோர் சிறைத்துறை கூடுதல் சூப்பிரண்ட், சிறைத்துறை சூப்பிரண்ட், சிறைத் துறை டிஐஜி என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம். நேரடி ஜெயிலர் நியமனம் பல ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. சிறைத்துறை உதவி ஜெயிலர் பணிக்கான தேர்வு அண்மையில் தான் நடத்தப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.




No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.