-->

Saturday, December 3, 2016

tnpsc ‘குரூப்-1’ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

'குரூப்-1' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு | சென்னை கலெக்டர் .மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது) அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு நாடும் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-1 ல் அடங்கி உள்ள 85 காலி பணி இடங்களுக்கு வரும் 19.2.2017 அன்று எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் 9-ந்தேதி முதல் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது), சாந்தோம், சென்னை-4 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் உரிய கல்வி சான்றுகளுடன் 8-ந்தேதிக்குள் வேலைநாட்களில் நேரில் தொடர்புகொண்டு இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.