ஆதார் எண் மூலம் பணம் செலுத்தும் வசதி மத்திய அரசு திட்டம்

ஆதார் எண் மூலம் பணம் செலுத்தும் வசதி மத்திய அரசு திட்டம் | பணமற்ற பொருளாதார நடவடிக் கைகளை ஊக்குவிப்பதற்காக ஆதார் எண் அடிப்படையிலான பணப் பரிமாற்ற திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பயோ மெட்ரிக் அடிப்படையிலான அடையாளம் என்பதால் பல்வேறு துறைகளிலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கை களை அரசு மேற்கொண்டுள் ளது. இதனடிப்படையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுக்கு மாற் றாக, ஆதார் எண் அடிப்படையி லான பரிமாற்றத்துக்கான செயலியை உருவாக்க திட்ட மிட்டுள்ளது. இந்த செயலியை அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம். வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பாஸ்வேர்டு, பின் நம்பர் போன்றவை இல்லாமல் ஆதார் எண் மூலம் பரிமாற்றம் மேற்கொள்ளலாம். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய யுஐடிஏஐ-ன் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே, இதுவரை பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் எண் அங்கீகாரம் 40 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வகையிலான பரிவர்த்தனையை அதிகரிக்க விழிப்புணர்வு வேலை களை மேற்கொண்டுள்ளோம். அரசு நிறுவனங்களில் ஆதார் எண் பயன்படுத்தி ஊழியர்களின் வருகைப் பதிவு மேற்கொள்ளப் படுவதையும் விளக்கினார். வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் கிரெடிட் கார்டு டெபிட் கார்டு இல்லாமல் பரிமாற்றம் செய்ய ஆதார் எண்ணை பயன்படுத்த முடியும். பயோமெட்ரிக் மூலமான அடையாளம் போதும் என்றார். பரிமாற்றம் செய்ய வேண்டிய பணம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து வர்த்தக நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்ப முடியும், தற்போது 118 பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துகின்றன.Comments