டெபிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்குவதற்கான சேவை வரி விலக்கு மத்திய அரசு அறிவிப்பு

டெபிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்குவதற்கான சேவை வரி விலக்கு மத்திய அரசு அறிவிப்பு | டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது விதிக்கப்படும் சேவை வரியில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. பணத்தட்டுப்பாடு மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்காக மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் நீண்ட வரிசைகளில் காத்திருக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் இல்லாத பண பரிமாற்றத்துக்கு மக்கள் மாற வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தி வருகிறது. டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் இதர செல்போன் வழியான பணபரிமாற்றங்கள் செய்யவும் ஊக்கப்படுத்துகிறது. இதற்காக வங்கிகள் மார்ச் 31-ந் தேதிக்குள் நாடு முழுவதும் கூடுதலாக 10 லட்சம் 'ஸ்வைப் மிஷின்களை' (பி.ஓ.எஸ். கருவிகள்) நிறுவ வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. ரூ.2 ஆயிரம் வரை வரிவிலக்கு ஆனால் இப்போது மக்கள் வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கியதற்காக இந்த கார்டுகள் மூலம் ரூ.2 ஆயிரம் வரை தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தும்போது ரூ.30 சேவை வரியாக விதிக்கப்படுகிறது. இந்த சேவை வரியை பல நிறுவனங்கள் தங்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்கின்றன. சில நிறுவனங்கள் இந்த சேவை வரியை மக்களிடம் வசூலிக்கின்றன. ரூபாய் நோட்டுகள் இல்லாத பண பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சேவை வரிகள் அறிவிக்கை ஜூன் 2012-ல் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த அறிவிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது உடனடியாக நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்டு எதிர்ப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் இதனை நிறைவேற்றியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறும்போது, "எந்த வரி தொடர்பான முன்மொழிவுகளும் பாராளுமன்ற ஒப்புதல் இன்றி அமல்படுத்தப்படக் கூடாது. இது பாராளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிரானது. இந்திய நிதி தொடர்பான வரி விலக்கு அல்லது வரி விதிப்பு போன்ற அனைத்து பிரச்சினைகளும் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றக் கூடாது" என்றார். மற்றொரு கம்யூனிஸ்டு எம்.பி.யான முகமது சலிம் கூறும்போது, "ஒரு அறிவிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதே நாளில் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றில் எந்த அரசும் இவ்வளவு விரைவாக செயல்பட்டது இல்லை. எந்த மாற்றமும் பாராளுமன்ற ஒப்புதல் இன்றி செயல்படுத்தக் கூடாது" என்றார்.Comments