நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.காற்றாடிகளை பறக்கவிடுவதற்கு நாடு முழுவதும் மாஞ்சா நூலை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். நைலான் அல்லது செயற்கை பருத்தியால் தயாரிக்கப்படும் இந்த நூலில் கண்ணாடியை இடித்து தூளாக்கி அதை பசையுடன் கலந்து காற்றாடிகளுக்கு பயன்படுத்துகின்றனர். "ஆபத்தான இந்த மாஞ்சா நூலில் தயாரித்த காற்றாடிகளை பறக்கவிடும்போது அதன் நூல் கழுத்தில் சிக்கி பலியானோர் ஏராளம். இந்த நூலில் தயாரான காற்றாடிகள் பறவைகளின் உயிரையும் பறிக்கின்றன. எனவே மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கோரி விலங்குகள் நல அமைப்பான "பீட்டா" தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று நடந்தது. அப்போது மாஞ்சா நூல் கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 1-ந் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்ட நீதிபதி அதுவரை நாடு முழுவதும் இந்த தடை நீடிக்கும் என்றார்.Comments