ரெயில்வே வழங்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தகவல் அருண்ஜெட்லி

ரெயில்வே வழங்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தகவல் அருண்ஜெட்லி | ரெயில்வே வழங்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். ஒரே பட்ஜெட் அடுத்த ஆண்டு(2017) முதல் ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் கிடையாது என்று மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனால் மத்திய பட்ஜெட்டில்தான் இனி ரெயில்வே கட்டண உயர்வு, புதிய ரெயில்கள், சலுகைகள் ஆகியவை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். 92 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பட்ஜெட்டுடன், ரெயில்வே பட்ஜெட் ஒன்றாக இணைத்து தாக்கல் செய்யப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே அடுத்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது நிதி மந்திரி அருண்ஜெட்லி ரெயில் இலாகாவிற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவார். இந்த நிலையில் டெல்லியில் இந்திய தொழிற் கூட்டமைப்பும் ரெயில்வேயும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பேசிய நிதி மந்திரி அருண்ஜெட்லி ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- சேவைக் கட்டணம் எந்த ஒரு நிறுவனமும், குறிப்பாக வர்த்தக நிறுவனம் சிறப்பாக செயல்படவேண்டும் என்றால் அதற்கு வாடிக்கையாளர்கள் தகுந்த சேவைக் கட்டணங்களை செலுத்தியே ஆகவேண்டும். எரிசக்தி நிறுவனங்கள் 1990-ம் ஆண்டுக்கு முன்பு வரை நஷ்டத்திலேயே இயங்கி வந்தன. சேவை கட்டணத்தை நுகர்வோர் செலுத்தாமல் போனதுதான் இதற்கு காரணம். இதில் 2003-ம் ஆண்டு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட பின்புதான் அவை நஷ்டத்தில் இருந்து மீண்டன. இதேபோல் நுகர்வோர் சுங்க கட்டணம், எரிபொருள் மீது கூடுதல் வரி ஆகியவற்றை செலுத்தத் தொடங்கிய பிறகுதான் தேசிய நெடுஞ்சாலைத்துறையும் வளர்ச்சி காணத் தொடங்கியது. உயர்த்தப்படும் இன்று உலக அளவிலும் இதுபோல் பல நிறுவனங்கள் வெற்றிகண்டு இருப்பதற்கு, நுகர்வோர் தாங்கள் பெறும் சேவைக்கு ஏற்ப கட்டணங்களை செலுத்தி வருவதுதான் காரணம். ஆனால் இது, நமது நாட்டில் தலை கீழாக இருக்கிறது. நுகர்வோருக்கு ஜனரஞ்ச போக்குதான் பிடிக்கும் என விதியை வகுத்துக் கொண்டதால் அவர்கள் பெறும் சேவைக்கு உரிய கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தவிர்க்கவேண்டும் என்றால் ரெயில்வேயிடம் பெறும் சேவைகளுக்கு பயணிகள் கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும். எனவே ரெயில் கட்டணம் உயர்த்தப்படும். (தற்போது ஒரு பயணத்துக் கான ரெயில் கட்டணம் ரூ.100 என்றால் இதில் ரெயில்வே இலாகாவுக்கு ரூ.57 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. மீதித் தொகை மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.) பலப்படுத்தவேண்டும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் சில விமான நிலையங்களில் உலகத் தரத்திற்கு இணையான வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் தன்னிடம் நிறைய நிலங்கள், சொந்தமான கட்டிடங்கள் இருந்தும் ரெயில் நிலையங்களால் அந்த அளவிற்கு உயரமுடியவில்லை. எனவே ரெயில்வே தனது செயல்திறனையும், உள் நிர்வாகத்தையும் பலப்படுத்தாதவரை பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவை ஆகியவற்றின் மீதான போட்டியில் இருந்து வெளியேறும் நிலை உருவாகிடும். கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு அளிக்கும் சேவைகள் விஷயத்தில் ரெயில்வே இலாகா மிகுந்த கவனம் செலுத்தி வருவது பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.Comments