அந்தமான் அருகே வலுப்பெறும் மேலடுக்கு சுழற்சி

அந்தமான் அருகே வலுப்பெறும் மேலடுக்கு சுழற்சி | தாய்லாந்து அருகே உருவான மேலடுக்கு சுழற்சி நகர்ந்து, அந்தமான் அருகே வலுப்பெற்று வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "தாய்லாந்து அருகே நேற்று முன்தினம் மேல டுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருந் தது. இது மேலும் வலுப்பெற்று, மியான்மர் மற்றும் தெற்கு அந்த மான் கடல் பகுதியில் தற்போது நிலவி வருகிறது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதன் போக்கு தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது. மேலும் வார்தா புயல் அரபிக் கடலுக்குச் சென்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் மையம் கொண்டுள் ளது. இது அடுத்த 48 மணி நேரத் தில் மேலும் வலுப்பெற்று காற்ற ழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது.Comments