சென்னை வர்த்தக மையத்தில் திருமணம் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது

சென்னை வர்த்தக மையத்தில் திருமணம் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது | சென்னை வர்த்தக மையத்தில், திருமணம் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. கண்காட்சி - விற்பனை டர்ன் கீ ஈவண்ட்ஸ் மற்றும் ஐடீல் அட்ஸ் அண்டு ஈவண்ட்ஸ் சார்பில் திருமணம் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனையை அபி இம்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் லட்சுமணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க இணை நிர்வாக இயக்குனர் மோகன்குமார், சில்க் மார்க் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியா உதவி இயக்குனர் பாஸ்கரன், டர்ன் கீ ஈவண்ட்ஸ் தலைமை நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஐடீல் ஆட்ஸ் மற்றும் ஈவண்ட்ஸ் தலைமை நிர்வாக இயக்குனர் பிரபு ரோஷன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நாளை நிறைவு பெறுகிறது திருமண கண்காட்சியை பொறுத்தவரை, பெண் பார்க்கும் படலம் முதல் தேனிலவு செல்வது வரை திருமண வைபவத்திற்கு தேவையான அனைத்து நகைகளும், பொருட்களும் இடம் பெற்றுள்ளன. பர்னிச்சர் கண்காட்சியில், இந்திய தயாரிப்புகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கட்டில்கள், மெத்தைகள், சோபா செட், டைனிங் டேபிள் செட், பீரோ, டிரஸ்சிங் டேபிள், வீட்டு உள் அலங்காரப் பொருட்கள் உள்பட ஏராளமானவை இடம் பெற்றுள்ளன. மொத்தம் 70-க்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.Comments