மும்பையில் இருந்து கவர்னர் சென்னை வந்தார்

மும்பையில் இருந்து கவர்னர் சென்னை வந்தார் | முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வெளியான தகவல் அறிந்ததும் .தி.மு.. பெண் தொண்டர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு சோகத்தில் ஆழ்ந்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் கேள்விப்பட்டதும் மும்பையில் இருந்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார். தொண்டர்கள் குவிந்தனர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் பரவியதும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு .தி.மு.. தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள். நேரம் செல்ல, செல்ல தொண்டர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. .தி.மு.. மகளிரணியினர் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இதனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகம் சோகமயமாக காட்சி அளித்தது. இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் வெளியான போது, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்தார். உடனடியாக அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். இரவோடு இரவாக அவர் சென்னை வந்து சேர்ந்தார். ராஜ்நாத் சிங் இதற்கிடையே முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.Comments