பொங்கல் சிறப்பு பேருந்துகள் விரைவில் அறிவிக்கப்படும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் விரைவில் அறிவிக்கப்படும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் | தீபாவளி பண்டிகையின் போது இயக்கியதுபோல், வரும் பொங்கல் பண்டிகையின் போதும் சென்னையில் 4 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் பிரித்து இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற் படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த தீபாவளி பண் டிகையின்போது சென்னையில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. மக்களின் வசதிக்காக கோயம் பேடு, பூந்தமல்லி, தாம்பரம் (சானட்டோரியம்), அண்ணாநகர் (மேற்கு), கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே அமைக்கப் பட்டுள்ள மாநில தேர்தல் ஆணை யம் பேருந்து நிலையத்தில் இருந் தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. இதனால், சென்னை மற் றும் புறநகர் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் குறைந்தது. இந்த புதிய திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கிடையே, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் ஆலோ சனை கூட்டம் சென்னையில் நடந் தது. இதில், 8 போக்குவரத்து கழ கங்களின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், போக்குவரத்து மாற்றம் உள் ளிட்டவை குறித்தும், போக்கு வரத்து துறையின் முழு செயல் பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் கோயம் பேடு உட்பட 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கப் பட்டன. இதேபோல், வரும் பொங் கல் பண்டிகையின் போதும், சிறப்பு பேருந்துகளை பிரித்து இயக்க முடிவு செய்துள்ளோம். கடந்த பொங்கல் பண்டிகையின்போது மொத்தம் 12 ஆயிரத்து 624 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டும் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்துகள், சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். சிறப்பு பேருந்துகள், சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.Comments