வங்கிக் கணக்கு இல்லாமல் சம்பளம் பெறுவோர் பணம் எடுக்க இந்தியன் வங்கி ‘கேஷ் கார்டு’ அறிமுகம்

வங்கிக் கணக்கு இல்லாமல் சம்பளம் பெறுவோர் பணம் எடுக்க இந்தியன் வங்கி 'கேஷ் கார்டு' அறிமுகம் | 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், வங்கிக் கணக்கு இல்லாமல் சம்பளத்தைப் பெறும் பொதுமக்களுக்கு பயன் படும் வகையில் இந்தியன் வங்கி 'கேஷ் கார்டு' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தி யுள்ளது. இதுகுறித்து, இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் தெரிவித்துள்ளதாவது: பணமதிப்பு நீக்க அறிவிப்பை யடுத்து பொதுமக்களும், நலிந்த பிரிவினர், அமைப்புசாரா தொழி லாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகை யில் இந்தியன் வங்கி 'கேஷ் கார்டு'-ஐ அறிமுகப்படுத்தி யுள்ளது. வங்கிக் கணக்கு இல் லாமலேயே சம்பளத்தை நேரடி யாக பெறுகின்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இவ்வசதி உருவாக்கப் பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர் களுக்கு தாமதமின்றி ஊதியத்தை உடனடியாக வழங்கலாம். இந்த கார்டை 10 லட்சத்துக்கு மேற்பட்ட உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களிலும், 2 லட்சத்துக்கும் அதிகமான ஏடிஎம் மையங்களிலும் பயன்படுத்தலாம். நாள்தோறும் ரூ.50 ஆயிரம் வரை இந்தக் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்கவோ பொருட்களை வாங்கவோ முடியும். மேலும், வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப நகைக் கடன் பெறும் வசதி' என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் ஆப் மூலம் வங்கி ஊழியர்களை சந்திக்க தங்களுக்கேற்ற நேரத்தைக் குறிப்பிட்டு நகைக் கடன் பெறலாம்.Comments