‘அசோசெம்’ விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

'அசோசெம்' விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு | ஒருங்கிணைந்த இந்திய தொழிலமைப்புகளின் கூட்டமைப்பு (அசோசெம்) நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித் துள்ளதாவது: மத்திய அரசு அக்டோபர் 28-ம் தேதியை தேசிய ஆயுர்வேத நாளாக கடைப்பிடித்து வருகிறது. இதன் மூலம், ஆயுர்வேதத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் ஏற்பட்டுள் ளது என்பது தெரிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆயுர்வேதமும், இயற்கை மருத்துவமும் மாற் றத்தை ஏற்படுத்தி வருகிறது. இத னைக் கருத்தில் கொண்டு ஒருங்கி ணைந்த இந்திய தொழிலமைப்பு களின் கூட்டமைப்பு மூலமாக ஆயுர்வேத மற்றும் இயற்கை மருந்துகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத் தொழிலில் ஈடுபடு வோர் இவ்விருதுகளுக்கு விண் ணப்பிக்கலாம். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் 044-28120000 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசித் தேதி வரும் 10-ம் தேதியாகும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments