தொடர் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தொடர் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு | கிறிஸ்துமஸ், வருடப் பிறப்பு, சபரிமலை சீசன், தைப்பூசம், பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. செங்கல்பட்டு-நெல்லை இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நெல்லை-செங்கல்பட்டு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06062) 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26, பிப்ரவரி 2, 9 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
* செங்கல்பட்டு-நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (06061) 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27, பிப்ரவரி 3, 10 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு இரவு 2.40 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
* நெல்லை-செங்கல்பட்டு வாராந்திர சிறப்பு ரெயில் (06064) 18, 25, ஜனவரி 1, 8, 15, 22, 29, பிப்ரவரி 5 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
* செங்கல்பட்டு-நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (06063) 19, 26, ஜனவரி 2, 9, 16, 23, 30, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு 2.40 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
சென்னை எழும்பூர்-திருச்சி
* திருச்சி-சென்னை எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (06066) 12, 19, 26, ஜனவரி 2, 9, 16, 23, 30, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
* சென்னை எழும்பூர்- திருச்சி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (06065) 13, 20, 27, ஜனவரி 3, 10, 17, 24, 31, பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
* கோவை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் (06068) 19, 21, 26, 28, ஜனவரி 2, 4, 9, 11, 16, 18, 23, 25, 30, பிப்ரவரி 1, 6, 8 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
* செங்கல்பட்டு-கோவை இடையே சிறப்பு ரெயில் (06067) 20, 22, 27, 29, ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31, பிப்ரவரி 2, 7, 9 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு கோவையை சென்றடையும்.
கொல்லம்-சென்னை சென்டிரல்
* ஈரோடு-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06028) 17, 18, 24, 25, 31 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.45 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
* சென்னை எழும்பூர்-ஈரோடு இடையே சிறப்பு ரெயில் (06027) 17, 18, 24, 25, 31 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு ஈரோட்டை சென்றடையும்.
* கொல்லம்-சென்னை சென்டிரல் இடையே சுவிதா சிறப்பு ரெயில் (82632) ஜனவரி 8-ந்தேதி மதியம் 3.35 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
Comments