சென்னை டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறும் வார்தா புயலால் ஆடுகளத்துக்கு பாதிப்பில்லை டிஎன்சிஏ செயலாளர் காசி விஸ்வநாதன் தகவல்

சென்னை டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறும் வார்தா புயலால் ஆடுகளத்துக்கு பாதிப்பில்லை டிஎன்சிஏ செயலாளர் காசி விஸ்வநாதன் தகவல் | வார்தா புயலால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத் துக்கும், அவுட் பீல்டுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) செயலாளர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அலாஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந் திருந்தது. விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் 246 ரன்கள் வித்தியாசத் திலும், மொகாலி டெஸ்ட்டில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றி ருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் முடிவடைந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னையை வார்தா புயல் தாக்கியதால் கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் டிஎன்சிஏ செய லாளர் காசி விஸ்நாதன் கூறும் போது, ''சேப்பாக்கம் ஆடுகளத்தின் மைய பகுதியும், எல்லை கோட்டை (அவுட் பீல்டு) ஒட்டிய பகுதியும் வார்தா புயல் காரணமாக பாதிக்கப்படவில்லை. சைட் ஸ்கிரீன் பலத்த சேதம் அடைந்துள்ளது. மின்னொளி விளக்குகளில் உள்ள பல்புகளும் சேதமடைந் துள்ளது. இதேபோல் குளிர்சாதன பெட்டிகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. எனினும் இரு நாட்களில் இவற்றை சரிசெய்துவிடுவோம். மைதானத்தை நோக்கி வரும் சாலைகளில் 100-க்கும் அதிகமான மரங்கள் சரிந்து கிடக்கின்றன. அடுத்த இருநாட்களும் எங் களுக்கு சாவாலாகவே இருக்கும். எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியும் என்ற நம்பிக்கை எங்க ளுக்கு உள்ளது. திட்டமிட்டபடி போட்டி நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை'' என்றார்.Comments