-->

Thursday, December 29, 2016

தனிநபர் வருமான வரிவிகிதத்தை குறைக்க வேண்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தனிநபர் வருமான வரிவிகிதத்தை குறைக்க வேண்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தல் | தனிநபர் வருமான வரிவிகிதத்தை குறைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தினர். பட்ஜெட் தேதி மாற்றம் வருகிற 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசிக்க டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடந்தது. அதன் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வழக்கமாக பட்ஜெட் பிப்ரவரி 28-ந்தேதி வெளியிடப்படும். ஆனால் வரும் நிதி ஆண்டில் பிப்ரவரி 1-ந்தேதியே வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளுக்கு நிதி முன்னதாகவே சென்றடையவே இந்த முறை முன்னதாக பட்ஜெட் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் வரும் ஆண்டில் தனியாக ரெயில்வே பட்ஜெட் இருக்காது. அது பொது பட்ஜெட்டிலேயே இணைக்கப்படும் என்றார். வருமான வரி விகிதம் பின்னர் கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாய நலத்திட்டங்கள், திறன் மேம்பாடு பயிற்சி, கல்வி உள்ளிட்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அறிவிப்பு இருக்க வேண்டும் என்று மோடி அறிவுறுத்தினார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சர்வதேச தரத்துக்கு இந்தியா உயர, தனி நபர் வருமான வரி மற்றும் நிறுவனங்களுக்கான வரியை எளிமையாக்க வேண்டும், தனி நபர் நேரடி வருமான வரி விகிதத்தை குறைக்க வேண்டும், சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வரி விகிதங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் ஆலோசனை வழங்கினர். அதிக வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய சுற்றுலா துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.