‘நாடா’ புயல் எதிரொலி: கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்வார்கள்

'நாடா' புயல் எதிரொலி: கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்வார்கள் | வங்கக்கடலில் உருவான 'நாடா' புயலையொட்டி, இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் இன்று மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று கல்லூரி கல்வி இயக்குனரக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:- கனமழையை முன்னிட்டு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.Comments