பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை பி.எஸ்.என்.எல். அறிவிப்பு | சென்னை வட்ட பி.எஸ்.என்.எல், துணை பொதுமேலாளர் ஜி.விஜயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது. அதாவது ரூ.339 ரிசார்ஜ் செய்தால் 28 நாட்கள் அவகாசத்தில் அனைத்து செல்போன் நிறுவன செல்போன்களிலும் எஸ்.டி.டி மற்றும் லோக்கல் கால்கள் பேச முடியும். அத்துடன் 1 ஜி.பி., டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதேபோல் 28 நாட்கள் அவகாசத்தில் ரூ.139 கட்டணத்தில் அனைத்து பி.எஸ்.என்.எல். நிறுவன தொலைபேசிகளிலும் எஸ்.டி.டி. மற்றும் லோக்கல் அழைப்புகளுடன் 300 எம்.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.Comments