-->

Friday, December 2, 2016

பொது அறிவு | இந்திய கடற்படை அமைப்பின் தலைமையகம்

1) டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவரின் பெயர் என்ன?
2) சர்வதேச போலீஸ் அமைப்பான 'இண்டர்போல்' நிறுவனத்தின் புதிய தலைவர் யார்?
3) பறவை இனங்களில் அதிவேகமாக பறக்கும் பறவை எது?
4) இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெறுள்ள புதுமுக வீரர் அவர், அவரது வயது 19, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் புகழ்பெற்று விளங்கிய ஜெப் பாய்காட் போல சிறந்த வீரரான இவர் வருவார் என்று புகழப்படுகிறது. அவரது பெயர் என்ன?
5) இந்தியாவின் 'பட்டாம்பூச்சி மனிதர்' என்ற சிறப்பு பெற்றவர் யார்?
6) கிஷன் கங்கா மற்றும் ராட்டில் நீர் மீன் திட்டம் எந்த மாநிலத்தில் செயல்படுகிறது?
7) பின்லாந்து நாட்டின் எந்த இடத்தில் உலகிலேயே மிகப்பெரிய பனிக்கோட்டை அமைந்துள்ளது?
8) தன்சா, வைதரன்னா மற்றும் துளசி ஆகியவை ஏரிகளின் பெயர்களாகும். இவை எந்த இந்திய நகரத்தில் அமைந்துள்ளன?
9) இந்திய கடற்படை அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
10) இந்தியாவில் ஜனவரி 12-ந் தேதி தேசிய இளையோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது எந்த தலைவரின் பிறந்த நாள்?
விடைகள்:-
1) சைரஸ் மிஸ்ரி
2) சீனாவைச் சேர்ந்த மெங்ஹாங்வீ
3) பிரேசில் நாட்டைச்சேர்ந்த ஒரு வகை வவ்வால் இனம் தான் பறவைகளில் அதிகவேகமாக பறக்கும். இது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
4) ஹசீப் ஹபீஸ்
5) மும்பையில் உள்ள தேசிய வரலாற்று அமைப்பில் துணை இயக்குனராக பணிபுரியும் ஐசக் கெகிம்கர் என்பவர் தான் 'இந்திய பட்டாம்பூச்சி மனிதர்' என்று அழைக்கப்படுகிறார்.
6) ஜம்மு காஷ்மீர் மாநிலம்
7) தெற்கு லாப்லாண்ட் என்ற இடத்தில் உள்ள கெமி.
8) மும்பை.
9) புதுடெல்லி
10) சுவாமி விவேகானந்தர்




No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.