‘ஆதார் அட்டை’ திட்டம் மிக முக்கியமான நடவடிக்கை ஐநா புகழாரம்

'ஆதார் அட்டை' திட்டம் மிக முக்கியமான நடவடிக்கை ஐநா புகழாரம் | இந்தியாவில் அரசு சலுகைகளைப் பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட 'ஆதார் அட்டை' திட்டம் மிகவும் முக்கியமான நடவடிக்கை என ஐநா புகழாரம் சூட்டி உள்ளது. உலக சமூக சூழ்நிலை (2016) அறிக்கையை ஐநா பொருளாதார மற்றும் சமூக நலத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்திய அரசு நாட்டில் உள்ள சுமார் 120 கோடிக்கும் மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்க கடந்த 2010-ம் ஆண்டு முடிவு செய்தது. இதன்படி இதுவரை சுமார் 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான நடவடிக்கை ஆகும். அரசின் சலுகைகள் மற்றும் சேவைகள் குறிப்பிட்டவர்களை நேரடியாக சென்று சேர்வதை இது உறுதி செய்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க இது உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments