பாராளுமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலை: ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கவேண்டும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்

பாராளுமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலை: ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா' வழங்கவேண்டும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் | ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா விருதை' வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டம் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 10-ந்தேதி  அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் நலன் ஒன்றையே முழு மூச்சாகக்கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் அருந்தொண் டாற்றியவரும், உலகமெங்கும் வாழும் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இந்திய துணைக்கண்டத்தின் ஈடு இணையற்ற அரசியல் தலைவராகவும், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் லட்சியங்களைக் காத்து, அ.தி.மு.க. கட்சியை வியக்க வைக்கும் அளவிற்கு வளர்த்து, 6-வது முறையாக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று, இந்தியாவின் புகழ்மிக்க முதல்-அமைச்சராக நல்லாட்சி நடத்தி, தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் செலுத்தியவரும், ஆழ்ந்த இரங்கல் கடைக்கோடி ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே தனது லட்சியமாக கொண்டவரும், எந்த முடிவை எடுத்தாலும் அதில் உறுதியுடன் இருந்து தமிழர்களின் இன்னல் தீர்ப்பதே தலையாய கடமை என செயல்பட்டவரும், வாழும் போதே வரலாறு ஆனவரும், தமிழக மக்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த ஜெயலலிதா எதிர்பாராதவிதமாக 5.12.16 அன்று இயற்கை எய்தியது குறித்து, தமிழக அமைச்சரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. ஜெயலலிதாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் லட்சோப லட்சம் கட்சித் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்நாடு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக்கொள்கிறது. பாரத ரத்னா விருது அனைவரின் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின்திருவுருவப் படத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் வைப்பதற்கும், அவருக்கு பாரத ரத்னா விருது அளிப்பதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதற்கும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அமைப்பதற்கு மத்திய அரசிடம் கோருவதற்கும், அவரை நல்லடக்கம் செய்த அதே இடத்தில் ரூ.15 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைப்பதற்கும், பெயர் மாற்றம் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம் என்று பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Comments