அண்ணா பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு

அண்ணா பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு | கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வு களும் தள்ளிவைக்கப்படுவதாக வும், மறுதேதி பின்னர் அறிவிக்கப் படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.

Comments