அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் ‘செமஸ்டர்’ தேர்வுகள் இன்று ரத்து பதிவாளர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் 'செமஸ்டர்' தேர்வுகள் இன்று ரத்து பதிவாளர் தகவல் | வங்கக்கடலில் உருவான 'நாடா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி மாணவ-மாணவிகள் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள 'செமஸ்டர்' தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த 'செமஸ்டர்' தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ரத்து செய்யப்படும் 'செமஸ்டர்' தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.Comments