பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டார்கள் மத்திய அரசின் ‘காலக்கெடு’ நள்ளிரவுடன் முடிந்தது

பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டார்கள் மத்திய அரசின் 'காலக்கெடு' நள்ளிரவுடன் முடிந்தது | செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் நிலையங்கள் உள்பட மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு கடந்த 24-ந் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு முதலில் அறிவித்தது. பின்னர் இந்த காலகெடு டிசம்பர் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் 500 ரூபாய் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், 1,000 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று பெட்ரோல் நிலையங்களில் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டு டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவு வரை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நேற்று நள்ளிரவு 12 மணியுடன் காலகெடு முடிந்தது. கடைசி நாளான நேற்று பெட்ரோல் நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கூட்டம் அதிகம் இருந்தது. எனினும் சில்லரை தட்டுப்பாடு காரணமாக ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் 500 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கவில்லை. பெட்ரோல் நிலையங்களில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை கொடுப்பதில், வாகன ஓட்டிகளுக்கும், ஊழியர்களும் இடையே தினமும் வாய்த்தகராறு இருந்து வந்தது. தற்போது மத்திய அரசு வழங்கிய காலகெடு முடிவடைந்திருப்பது நிம்மதி அளிப்பதாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.Comments