புதிய 500, 2000 ரூபாய் தாள்களுக்கு ஏற்ப 90% ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைப்பு 10 நாட்களில் பணிகள் முழுமையடையும்

புதிய 500, 2000 ரூபாய் தாள்களுக்கு ஏற்ப 90% ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைப்பு 10 நாட்களில் பணிகள் முழுமையடையும் | நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏடிஎம்களில், 90 சதவீதம் இயந் திரங்கள், புதிய 500, 2000 ரூபாய் தாள்களை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுவிட்ட தாகவும், எஞ்சிய இயந்திரங்கள் அடுத்த 10 நாட்களில் தயாராகி விடும் என்றும் ஏடிஎம் தயாரிப்பு நிறுவன அதிகாரி தெரிவித்தார். கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு வரை புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்கள் அன்றைய தினமே மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு, செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 தாள்கள் அச்சிடப்பட்டன. முதலில் 2000 தாள்களை மட்டும் மத்திய அரசு புழக்கத்தில் விட்டது. எனினும், ஏடிஎம் இயந் திரங்கள் புதிய வடிவிலான தாள் களை வைக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படவில்லை. 100 ரூபாய்கள் மட்டும் ஏடிஎம் மூலம் மக்களை சென்றடைந்தன. வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் எடுப் பவர்களுக்கு 2,000 ரூபாய் தாள்கள் வழங்கப்பட்டன. புதிய தாள்களுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைக்கும் பணி படிப்படியாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சில வங்கிகளின் இயந்திரங்களின் மூலம் மட்டுமே தற்போது புதிய 2000 தாள்கள் கிடைக்கின்றன. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி, நாடு முழுவதும் உள்ள இயந்திரங்கள் நேற்றைய தினமே புதிய தாள்களை விநியோ கிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனாலும், பெரும்பாலான இயந்திரங்கள், புதிய 500, 2000 தாள்களை வழங்கத் தயாராக இல்லை. சம்பளத் தொகையை எடுக்க பணியாளர்கள் ஏடிஎம் களை நோக்கி படையெடுப்பதும், வேலை செய்யும் ஏடிஎம்களில் மணிக்கணக்கில் காத்திருப்பதும் தொடர்கதையாகவே நீடிக்கிறது. இதுகுறித்து ஏடிஎம் இயந்திர தயாரிப்பு நிறுவனமான என்சிஆர் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் (இந்தியா, தெற்காசியா) நவ்ரோஸ் தஸ்தூர் கூறும்போது, 'ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா தலைமையிலான குழுவினர் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களை, புதிய 500, 2000 தாள்களை பயன் படுத்தும் வகையில் தயார்படுத் தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் இயந்திர தயாரிப்பு நிறு வனப் பணியாளர்கள் உள்ளிட் டோரும் இப்பணிகளில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். சுமார் 40 முதல் 60 பேர் கொண்ட குழுக்கள் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ஏடிஎம் என்ற வீதத்தில் இயந்திரங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். நவம்பர் 14-ம் தேதி தொடங்கி, நவம்பர் 30-ம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களும், புதிய 500, 2000 ரூபாய் தாள்களை கையாளும் வகையில் தயாராக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 90 சதவீதம், அதாவது 1.80 லட்சம் ஏடிஎம்கள் புதிய தாள்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன. அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்களும் புதிய தாள்களுக்காக தயாராகி விடும்' என்றார்.Comments