ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால் சில்லரை தட்டுப்பாடு புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியீடு தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால் சில்லரை தட்டுப்பாடு புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியீடு தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு | விரைவில் புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நோட்டுகள் தொடர்ந்து செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. சில்லரைக்கு தட்டுப்பாடு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை இந்த மாதம் 30-ந் தேதி வரை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றில் ரூ.500 நோட்டுகள் இன்னும் முழுஅளவில் புழக்கத்துக்கு வரவில்லை. வங்கிகளிலும், .டி.எம். எந்திரங்களிலும் பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளே கிடைப்பதால், அவற்றுக்கு சில்லரை பெறுவது சிரமமாக இருக்கிறது. புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகள் இதைத்தொடர்ந்து, சில்லரை தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட இருப்பதாக நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2005-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் வெளியான 20 ரூபாய் நோட்டுகளின் வரிசையில் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியிடப்பட இருப்பதாகவும், எல் என்ற ஆங்கில எழுத்துடன் ரூபாய் நோட்டின் எண்கள் இடம் பெறும் என்றும், இந்த எண்களின் வடிவம் சிறியதாக தொடங்கி பெரியதாக முடிவடையும் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 2005-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் வெளியான 50 ரூபாய் நோட்டுகளின் வரிசையில் புதிய ரூ.50 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த நோட்டுகளிலும் எண்களின் வடிவம் சிறியதாக தொடங்கி பெரியதாக முடிவடையும். ரூபாய் நோட்டுகள் செல்லும் தற்போது புழக்கத்தில் இருக்கும் 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளைப் போன்றே இந்த புதிய நோட்டுகளின் வடிவமும், பாதுகாப்பு அம்சமும் இருக்கும். ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்துடன் கூடிய இந்த புதிய நோட்டுகளின் பின்புறம் அச்சிட்ட ஆண்டு 2016 என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.20, ரூ.50 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.
Comments