உர்ஜித் படேலின் மாத சம்பளம் ரூ. 2 லட்சம்

உர்ஜித் படேலின் மாத சம்பளம் ரூ. 2 லட்சம் | பாரத ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேலின் மாத சம்பளம் ரூ. 2.09 லட்சமாகும். அவரது வீட்டு வேலைகளுக்கு பணியாளர் ஒதுக்கப்படவில்லை என ஆர்பிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை கவர்ன ராயிருந்த படேல் கடந்த ஆகஸ்ட் மாதம் கவர்னராக நியமிக்கப் பட்டார். துணை கவர்னராயிருந்த போது ஒதுக்கப்பட்ட மும்பையில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர் வசிக்கிறார். அவரது வீட்டில் பணிகளை செய்வதற்கு கூடுதல் பணியாளர்கள் யாரும் ஒதுக்கப்படவில்லை, அதே சமயம் 2 காரும் அதை இயக்க 2 டிரைவரும் அளிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) போடப் பட்ட மனுவுக்கு அளித்த பதிலில் இந்த விவரங்களை ஆர்பிஐ அளித் துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னரா யிருந்த ரகுராம் ராஜன் மற்றும் புதி தாக பொறுப்பேற்றுள்ள உர்ஜித் படேல் ஆகியோருக்கு வழங்கப் படும் ஊதிய விவரங்களை தெரிவிக் குமாறு ஆர்டிஐ மனுவில் கோரப் பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு சம்பளமாக உர்ஜித் படேல் ரூ.2.09 லட்சத்தைப் பெற்றுள்ளார். முந்தைய கவர்னர் ரகுராம் ராஜன் ஆகஸ்ட் மாதத்தில் பெற்ற சம்பளத்துக்கு இணையான ஊதி யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 4-ம் தேதி ரகுராம் ராஜன் பதவியிலிருந்து வெளியேறினார். அவருக்கு நான்கு நாள் ஊதியமாக ரூ. 27,933 அளிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி ராஜன் பதவியேற்றார். அப்போது அவருக்கு மாத ஊதியமாக ரூ. 1.69 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ரூ. 1.78 லட்சமாக வும், 2015 மார்ச்சில் ரூ. 1.87 லட்ச மாகவும் அவருக்கு சம்பளம் உயர்த் தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 2.04 லட்சமாக இருந்த சம்பளம் ரூ. 2.09 லட்சமாக உயர்த்தப்பட்டது. ரகுராம் ராஜனுக்கு 3 காரும் நான்கு டிரைவர்களும் அளிக்கப்பட் டனர். அவரது பங்களாவில் 10 பணி யாளர்கள் இருந்தனர். ரகுராம் ராஜன் பதவியில் தொடர விரும்பவில்லை என அறிவித்த பிறகு ஆர்பிஐ கவர்னர் பதவிக்கு சிலர் பரிந்துரைக்கப்பட்டனர். அவ் விதம் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களையோ அல்லது அவர் களில் உர்ஜித் படேல் ஏன் தேர்ந் தெடுக்கப்பட்டார் என்பது போன்ற விவரங்களை அமைச்சரவை ரகசியம் எனக் கூறி ஆர்டிஐ மனுவுக்கான பதிலில் குறிப்பிடவில்லை.

Comments