-->

Sunday, December 11, 2016

ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைக்கு புதிய தொழில்நுட்பம்: டிச.25 முதல் அறிமுகப்படுத்த பரிந்துரை

ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைக்கு புதிய தொழில்நுட்பம்: டிச.25 முதல் அறிமுகப்படுத்த பரிந்துரை | செல்லிடப்பேசி மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட யுஎஸ்எஸ்டி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதிக மதிப்புடைய பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள இணையவழிப் பணப் பரிவர்த்தனைக்கான முதல்வர்கள் குழுவை மத்திய அரசு உருவாக்கியது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்தக் குழுவில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய நிதியமைச்சகத்திடம் தனது பரிந்துரை அறிக்கையை முதல்வர்கள் குழு சமர்ப்பித்தது. அறிக்கையின் முக்கிய சாராம்சங்களாவன: செல்லிடப்பேசி மூலம் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் யுஎஸ்எஸ்டி தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட முறையை வரும் 25-ஆம் தேதியிலிருந்து அரசு அறிமுகப்படுத்த வேண்டும். ரொக்கமில்லா பணப் பரிவரித்தனையை மேற்கொள்ளும் வாடிக்கையாளரை ஆதார் மூலம் அடையாளம் காணும் முறை பின்பற்றப்பட வேண்டும். சாதாரண வியாபாரியும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில் அதன் நடைமுறைகளை ரிசர்வ் வங்கியும், மற்ற வங்கிகளும் ஊக்குவிக்க வேண்டும். செல்லிடப்பேசியில் ஆதார் அட்டை மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையிலான ஒரு செயலியை டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியப் பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.