பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஒரு லட்சம் கிராமங்களுக்கு 2 லட்சம் மினி ஏடிஎம் மெஷின்கள் ரூ. 120 கோடி செலவில் நபார்டு வங்கி வழங்குகிறது

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஒரு லட்சம் கிராமங்களுக்கு 2 லட்சம் மினி ஏடிஎம் மெஷின்கள் ரூ. 120 கோடி செலவில் நபார்டு வங்கி வழங்குகிறது | பணமில்லா மின்னணு பரிவர்த்தனை களை ஊக்குவிக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களுக்கு 2 லட்சம் மினி ஏடிஎம் (பிஓஎஸ்) மெஷின்களை நபார்டு வங்கி இலவசமாக வழங்குகிறது. கறுப்புப் பண புழக்கத்தை கட்டுப் படுத்தவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் பணமில்லா பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலை யில் பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்காக நபார்டு வங்கி ரூ. 228 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழு வதும் ஒரு லட்சம் கிராமங்களுக்கு தலா இரண்டு மினி ஏடிஎம் மெஷின்களை இல வசமாக நபார்டு வங்கி வழங்குகிறது. பத்தாயிரம் பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களில் உள்ள கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளிடம் இந்த மினி ஏடிஎம் மெஷின்கள் வழங்கப்படும். இதற் காக மட்டும் ரூ.120 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. 'தொடக்கத்தில் இந்த மினி ஏடிஎம்களை பயன்படுத்தி பணம் எடுப்பது குறித்து கிராம மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்துதல், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துதல், விதை, உரம் கொள்முதல் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு பணமில்லா பரிவர்த்தனைகள் செய்வது குறித்து படிப்படியாக பயிற்சி அளிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என நபார்டு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் 4.32 கோடி விவசாயிகள் ரூபே கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். இவை தற்போது ரகசிய குறியீட்டு எண் (பின் நம்பர்) இல்லாமல் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இவைகளுக்கும் ரகசிய குறியீட்டு எண் வழங்கப்பட்டு வழக்கமான ஏடிஎம் கார்டுகளைப் போல பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. இதனிடையே, பண மில்லா பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாலும் புதியவர்களும் மின்னணு முறை பரிவர்த்தனைகளுக்கு வந்திருப்ப தாலும் வங்கிப் பரிவர்த்தனைகளில் சைபர் குற்றங்கள் நடக்கலாம் என்பதால் அதை தடுக்கும் விதத்திலும் கூடுதல் பரிவர்த்தனைகளை சமாளிக்கும் விதமாக வங்கிகள் தங்களது கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த வேண்டி இருக்கும் என் பதால் அதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. அதன்படி, பணமில்லா பரிவர்த் தனைகள் முறையான வழியில் நடக் கிறதா என்பதை கண்காணிக்க அங்கீ கரிக்கப்பட்ட ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும். ஆடிட்டர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தை டிசம்பர் 21-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் தரும் ஆய்வு அறிக்கையை முதலில் 15 நாளைக்குள்ளும் அடுத் தடுத்து மாதாந்திர அறிக்கையாகவும் அனுப்பிவைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முதன்மை மேலாளர் நந்தா எஸ்.தேவ் அனைத்து வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.Comments