புதுச்சேரியில் தேசிய புத்தகக் காட்சி டிசம்பர் 16-ம் தேதி தொடக்கம்

புதுச்சேரியில் தேசிய புத்தகக் காட்சி டிசம்பர் 16-ம் தேதி தொடக்கம் | வரும் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தேசிய புத்தகக் காட்சி புதுச்சேரியில் நடைபெறுகிறது. புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கம் இதனை நடத்துகிறது. இதுகுறித்து சங்கத் தலைவர் சீனு. ராமச்சந்திரன், துணைத் தலைவர் பாஞ்.ராமலிங்கம், செயலாளர் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: புதுச்சேரி வள்ளலார் சாலை யில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் தேசிய புத்தகக் காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதி களில் இருந்து புத்தக வெளியீட்டா ளர்களும், புத்தக விற்பனையாளர் களும் வந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை விற்பனைக்கு வைக்க உள்ளனர். முதல்வர் தொடங்கி வைக்கிறார் இந்த புத்தக காட்சி, வார நாட் களில் மதியம் 1 மணி முதல் இரவு 8.45 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் திறந் திருக்கும். புத்தக காட்சியை புதுச் சேரி முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வைத் திலிங்கம், அமைச்சர் கந்தசாமி ஆகியோர் தொடங்கிவைக்கின் றனர். இங்கு புத்தகங்கள் வாங்கு வோருக்கு 10 சதவீத தள்ளு படி வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி மற் றும் பிற மொழி நூல்கள் புத்தக காட்சியில் இடம்பெறும். கல்வி நிறுவனங்கள் மற்றும் நூலகங் களுக்கு சிறப்புத் தள்ளுபடி உண்டு. தினமும் இலக்கிய இன் னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். பரிசுகள், விருதுகள் புத்தகம் வாங்கும் வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.200-க்கு மேல் புத்தகம் வாங்குவோர் குலுக்கல் முறையில் தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் களுக்கு ரூ.500 மதிப்புள்ள புத்தகங் கள் பரிசாக வழங்கப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் புத்தகம் வாங் கும் நபருக்கு 'புத்தக மகாராஜா' அல்லது 'புத்தக மகாராணி' விருதும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாங்கும் நபருக்கு 'புத்தக ராஜா' அல்லது 'புத்தக ராணி' விருதும்ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு 'புத்தக விரும்பி' விருதும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
Comments