14-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவுக்கு 12 தமிழ் திரைப்படங்கள் தேர்வு

14-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவுக்கு 12 தமிழ் திரைப்படங்கள் தேர்வு | சர்வதேச சென்னை திரைப்பட விழாவில் திரையிட 'இறைவி', 'ஜோக்கர்', 'ரூபாய்', 'தேவி' உள்ளிட்ட 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன. 14 வது சர்வதேச சென்னை திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் மொத்தம் 165 படங்கள் திரையிடப் பட உள்ளன. அதில் தமிழ் திரைப்படங்களின் பிரிவில் '24', 'அம்மா கணக்கு', 'தேவி', 'தர்மதுரை', 'இறைவி', 'ஜோக்கர்', 'கர்மா', 'நானும் ரவுடிதான்', 'பசங்க - 2', 'ரூபாய்', 'சில சமயங்களில்', 'உறியடி' ஆகிய 12 படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. சென்னையிலுள்ள உட் லாண்ட்ஸ் திரைப்பட வளாகம், ஐநாக்ஸ் திரையரங்கம், கேஸினோ, ரஷ்ய கலாச்சார மையம் மற்றும் ஆர்கேவி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் இந்தியன் பனோரமா படங்கள் 15, ஏசியன் ஃபிலிம் அவார்ட்ஸ் அகாடமி: ஃபிலிம் ரோட்ஷோ படங்கள் 8, 6 பிரெஞ்ச் படங்கள், 6 ஜெர்மன் படங்கள், 6 போலந்து படங்கள், 5 பிரேசில் படங்கள், 10 இரான் படங்கள் திரையிடப்பட உள்ளன.Comments