வீட்டு பாடம் செய்யாததால் ஆத்திரம் 10-ம் வகுப்பு மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்கு

வீட்டு பாடம் செய்யாததால் ஆத்திரம் 10-ம் வகுப்பு மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்கு | வீட்டு பாடம் செய்யாததால் 10-ம் வகுப்பு மாணவரை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் தலையில் காயம் அடைந்த மாணவருக்கு 4 தையல் போடப்பட்டது. மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீட்டு பாடம் செய்யாததால்.... வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த ரெட்டிவலம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா மகன் அரிதாஸ் (வயது 14). இவர் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் வழக்கம் போல், சிறப்பு வகுப்பு நடந்தது. சமூக அறிவியல் ஆசிரியரான முரளிதரன் பாடம் நடத்தினார். அப்போது மாணவர்களுக்கு வரைபடம் செய்து வருமாறு கொடுத்த வீட்டு பாடத்தை சரி பார்த்தார். மாணவர் அரிதாஸ் வீட்டு பாடம் செய்யவில்லை. பிரம்பால் அடித்த ஆசிரியர் இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் முரளிதரன், அரிதாசை பிரம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பிரம்பு பலமாக பட்டதில் ரத்தம் பீறிட்டு கொட்டியது. இதில் மாணவர் அரிதாஸ் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த சக மாணவர் ஓடிச்சென்று மற்ற ஆசிரியர்களை அழைத்து வந்தனர். இதையடுத்து அரிதாசை 4 ஆசிரியர்கள் கார் மூலம் பனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தலையில் 4 தையல்கள் அங்கு மாணவருக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டன. இதையடுத்து அரிதாசை ரெட்டிவலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு காரிலேயே அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை அறிந்த மாணவர் அரிதாசின் தாயார் மஞ்சுளா, மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நெமிலி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு ஆசிரியர் முரளிதரன் மீது மஞ்சுளா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஆசிரியர் முரளிதரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதி இதற்கிடையே நேற்று காலை மீண்டும் தலையில் வலி அதிகமாக இருப்பதாக அரிதாஸ் கூறியதைத்தொடர்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அரிதாஸ் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கப்பட்ட மாணவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.Comments