-->

Wednesday, December 14, 2016

சி.பி.எஸ்.இ. வழிக்கல்வியில் 10-ம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு மத்திய மந்திரி தகவல்

சி.பி.எஸ்.இ. வழிக்கல்வியில் 10-ம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு மத்திய மந்திரி தகவல் | மாநில பாடத்திட்டத்தை போல சி.பி.எஸ்.இ. வழிக்கல்வியிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்த நடைமுறை கடந்த 2010-ம் ஆண்டு கைவிடப்பட்டது. இந்த நிலையில் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் இருப்பது கல்வித்தரத்தை பாதிக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள். மேலும் நேரடியாக பிளஸ்-2 பொதுத்தேர்வை எதிர்கொள்வது மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு மீண்டும் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், 'இம்மாத இறுதியில் சி.பி.எஸ்.இ. வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 10-ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். எனவே அடுத்த கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று தெரிவித்தார்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.