மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படுமா?

மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படுமா? | கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ந்தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கும், .டி.எம். மையங்களுக்கும் மக்கள் அலைந்துதிரிந்து வருகின்றனர். பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முழுமையாக கொடுக்கமுடியவில்லை. .டி.எம். எந்திரங்களில் ஒரு நாளுக்கு ரூ.2,500 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இம்மாதம் முடிந்து அடுத்த மாதம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் வங்கி கணக்கு மூலமாகவே வழங்கப்படுகிறது. அதனை வங்கிகளுக்கு சென்று எடுப்பவர்களை விடவும், .டி.எம். மூலமாகவே எடுப்பவர்களே அதிகம். .டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்கு ஒரு நாளுக்கு உச்சவரம்பாக ரூ.2,500 நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் வீட்டு வாடகை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பணத்தை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனை தீர்க்க மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்கவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது.
Comments