யுஜிசி ‘நெட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி சென்னை பல்கலை. ஏற்பாடு

யுஜிசி 'நெட்' தேர்வுக்கு இலவச பயிற்சி சென்னை பல்கலை. ஏற்பாடு | பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் நடத்தப் படும் 'நெட்' தகுதித் தேர்வுக்கு சென்னை பல்கலைக்கழகம் இலவச பயிற்சி அளிக்க இருக்கிறது. பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மையம் மூலமாக அளிக்கப்படும் இந்த பயிற்சியில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இதற்கான வகுப்புகள் முதல் தாளுக்கு டிசம்பர் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும் (சனி, ஞாயிறு), 2, 3-ம் தாள்களுக்கு டிசம்பர் 19 முதல் 30-ம் தேதி வரை யும் நடைபெறும். பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மையத்தில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 7-ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-25399518 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மைய இயக்குநர் (பொறுப்பு) எம்.சக்திவேல் அறிவித்துள்ளார்.Comments