-->

Monday, November 7, 2016

புதிய கல்விக் கொள்கையில் விரைவில் உரிய முடிவு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.

புதிய கல்விக் கொள்கையில் விரைவில் உரிய முடிவு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விரைவில் அனைத்து எம்பிக்களுடனும் பேசி உரிய முடிவு மேற்கொள்ளப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். ஈஷா வித்யா பள்ளிகளின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, 'ஈஷா வித்யா தேசிய கல்வி மாநாடு' கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கிவைத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் கொண்டுவரப்பட்ட கல்வி முறையை நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். கேள்வி- பதில் என்ற முறையிலேயே அந்த கல்விமுறை அமைந்துள்ளது. அதனால் தற்போதைய சூழலில், கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளிலும் சிறந்த கல்வி வழங்க வேண்டியது அவசியம். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர் களும், தங்களது குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என கருதுகின்றனர். அதிக கல்விக் கட்டணம் வாங்கும் பள்ளிகள் மட்டுமே தரமானவை அல்ல. சிறந்த கல்வி அளிப்பதுடன், மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் பள்ளிகளே நல்ல பள்ளிகளாகும். கல்வி முறையின் அடிப்படை நோக்கம் நல்ல மனிதனை உருவாக்குவதாக இருக்க வேண்டும். இதற்காகத்தான் கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்கிறோம். கல்வி என்பது வியாபாரம் அல்ல. அது தெய்வீகமான பணி. எனவேதான், மத்திய அரசின் பள்ளிகளில் தேர்வு முறையை எடுத்துவிட்டோம். மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் படிக்க வேண் டும். கல்வியின் தரத்தை உயர்த்து வதற்காக பல்வேறு கோட்பாடுகள் ஆராயப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கை தொடர் பாக விரைவில் அனைத்து எம்பிக் களுடனும் பேசி, உரிய முடிவு மேற்கொள்ளப்படும் என்றார். ஈஷா வித்யா பள்ளிகளின் நிறு வனர் ஜக்கி வாசுதேவ் தலைமை வகித்து பேசும்போது, "தரமான மனிதனை உருவாக்க கல்வி முறை மிகவும் முக்கியமாகும். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரும் பங்கேற்க வேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்த, அதில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். உலகில் வியாபாரம் சுரண்டலாக உள்ளது. அதைத் தடுக்க, ஏழைகளையும் கல்வி சென்றடைய வேண்டும். பலரும் வெளிநாட்டில்தான் தரமான கல்வி கிடைக்கும் என நம்புகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். எனவே, கல்வியின் தரத்தை அதிகரிக்க, கல்வியில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்" என்றார். தேசிய கல்வி மைய முன்னாள் இயக்குநர் ராஜ்புட், பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்விச் செயலாளர் குந்தியா, மலையாள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் பிரத்யேக கல்வித் தேவைகள் குறித்தும், நாட்டின் வளர்ச்சியில் இளைய தலைமுறையின் பங்களிப்பு குறித்தும் பேசினர். முன்னதாக, ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு மத்திய அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.