சென்னை உயர் நீதிமன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை உயர் நீதிமன்ற பணி களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு கள் நேற்று வெளியிடப்பட்டன. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதியின் நேர்முக உதவியாளர், பதிவாளரின் நேர்முக உதவியாளர், நேர்முக எழுத்தர், கணினி இயக்குபவர், நீதிமன்ற அலுவலர், காசாளர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் ஆகியவற்றில் 391 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் 27 மற்றும் 28-ம் தேதியில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 41 ஆயிரத்து 813 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வில் நீதிபதியின் நேர்முக உதவியாளர், பதிவாளரின் நேர்முக உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14, 15-ம் தேதிகளில் நடைபெறும். நேர்காணல் இல்லாத மற்ற பதவிகளுக்கான தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரியவந்தால் அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வில் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந் தபட்ச மதிப்பெண் பெறாதவர் களின் மதிப்பெண்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Comments