அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைக்கும் சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது


அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைக்கும் சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது | அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு மற்றும் 'ரூபே கார்டு' வினியோகம் சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வங்கிகளில் சிறப்பு முகாம் தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு நாளை (திங்கட்கிழமை) முதல் வரும் டிசம்பர் 2-ந் தேதி வரை ஆதார் அட்டை இணைப்பு மற்றும் 'ரூபே கார்டு' வினியோகம் செய்ய சிறப்பு முகாம்களை நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் வங்கிகளின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவரான சென்னை மாவட்ட கலெக்டர் ஒவ்வொரு வங்கி கிளைகளிலும் சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டு உள்ளார். விண்ணப்பம் அளிக்கலாம் இந்த சிறப்பு முகாம் நாட்களில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆதார் அட்டை எண் மற்றும் செல்போன் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், 'ஜன்தன்' கணக்குகளில் வினியோகிக்கப்படாமல் உள்ள 'ரூபே கார்டு'களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். தொழிலாளர்கள் புதிய 'ஜன்தன்' சேமிப்பு கணக்கு களை தொடங்க விண்ணப்பங்கள் வழங்க இந்த சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்ய வங்கி கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்கு ஒவ்வொரு வங்கி கிளையிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு ஆதார் எண் இணைப்பு மற்றும் செல்போன் எண் இணைப்பு, 'ரூபே கார்டு'கள் வினியோகம் மற்றும் 'ஜன்தன்' சேமிப்பு கணக்கு தொடங்குதல் ஆகிய அனைத்து வசதிகளையும் இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் பெறலாம் என்று கலெக்டர் .மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments