சென்னையில் நளினி சுயசரிதை புத்தகம் வெளியீடு வைகோ, திருமாவளவன், சீமான், வேல்முருகன் பங்கேற்பு

சென்னையில் நளினி சுயசரிதை புத்தகம் வெளியீடு வைகோ, திருமாவளவன், சீமான், வேல்முருகன் பங்கேற்பு | சென்னையில் நளினி முருகன் சுயசரிதை புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் வைகோ, திருமாவளவன், சீமான், வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். புத்தக வெளியீட்டு விழா முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் நளினி, 'ராஜீவ் படுகொலை, மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்காவின் சந்திப்பும்', என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்து உள்ளார்
இந்த புத்தக வெளியீட்டு விழா வடபழனியில் நேற்று நடந்தது. புத்தகத்தை .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நளினியின் தாயார் பத்மாவதி, ஓவியர் சந்தானம், தயாரிப்பாளர் புகழேந்தி தங்கராஜ், தோழர் தியாகு, பா... சார்பில் வக்கீல் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். சோகங்கள் நிறைந்தது விழாவில் .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:- நளினி சிறையில் தான் பட்ட துன்பங்களை எல்லாம் இந்த நூலில் தொகுத்துள்ளார். இந்த புத்தகம் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் செல்லவேண்டும். இதை எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். தேவைப்பட்டால் இதை ஒரு வாழ்க்கை திரைப்படமாகவே எடுக்கலாம். அவ்வளவும் சோகங்கள் நிறைந்தது. இந்த வழக்கு தடா கோர்ட்டில் நடந்தபோது நானும் சாட்சியம் அளித்தேன். 66 பக்கங்களில் என் சாட்சி இடம்பெற்றுள்ளது. இது பொய்வழக்கு என்று தடா கோர்ட்டில் சொன்னேன். தமிழுக்கும், தமிழர்களுக்கும் வைகோ வாழ்ந்தான் என்பதை இது சொல்லும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வந்ததும் 161-வது விதியை பயன்படுத்தி நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Comments