ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் | ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில பொதுக்குழு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சரவணன், மாநில மகளிரணி செயலாளர்கள் கிருஷ்ணகுமாரி, சண்முகவடிவு, ஆபிதாநஸ்ரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:- தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வது, 6-வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாட்டினை களையவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தவேண்டும், 7 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும், 2016 நவம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும், தமிழக அரசுக்கு நன்றி மகப்பேறு விடுப்பினை 9 மாதமாக உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, புதிய கல்வி கொள்கையில் உள்ள முரண்பாடுகணை களையவேண்டும், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், தகுதி தேர்வு முடிக்கவில்லை என்ற காரணத்தினால் ஊதியம் நிறுத்தப்படுவதை கைவிடவேண்டும், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், 7-வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில கூடுதல் தலைவர் லெனின், மாநில துணை பொதுச் செயலாளர் பெர்க்மான்ஸ், மாநில துணை செயலாளர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.Comments