பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தளர்வு ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தளர்வு ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு | வங்கியிலிருந்து பணம் எடுப்பதற் கான கட்டுப்பாட்டை தளர்த்தி, புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், வங்கியிலிருந்து தினசரி பணம் எடுப்பதற்கான கட்டுபாட்டை தளர்த்தியுள்ளது. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள், மால் உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள தொகைகளை தினசரி வங்கியில் டெபாசிட் செய்து, கட்டுப்பாடில்லாமல் எடுத்துக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு ஏற்பட்டுள்ள பண நெருக்கடியால் 100, 50, 20 ரூபாய் நோட்டுகளுக் கான தேவை அதிகரித்துள்ளது. வங்கியில் பணத்தை எடுப்பதற் கான கட்டுப்பாடுகள் உள்ளதால் வர்த்தகர்கள் 100, 50, 20 நோட்டு களை வங்கியில் செலுத்த தயக்கம் காட்டுகின்றனர். இதனாலும் பண நெருக்கடி அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை சீராக்க ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. பண மதிப்பு நீக்கப்பட்ட 500, 1000 நோட்டுகள் இல்லாமல், தற்போது புழக்கத்தில் உள்ள 100, 50, 20 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்கிற பட்சத்தில் அவற்றை எடுக்க எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என கூறியுள்ளது. இந்த அறிவிப்பு நவம்பர் 29க்கு பிறகு நடைமுறைப் படுத்தப்படும். தற்போது உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளும் வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்கு பிறகு, நவம்பர் 27ம் தேதி வரை ரூ.8.45 லட்சம் கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யபட்டுள்ளன. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 1000 ரூபாய் நோட்டுகளில் 33,948 கோடி அளவுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டும், 8,11,033 கோடி ரூபாய் டெபாசிட்டும் செய்யப்பட்டுள்ளன.Comments