-->

Wednesday, November 2, 2016

உலகத்தர பல்கலை என்ற பெயரில் இடஒதுக்கீட்டை பறிக்க முயற்சி ராமதாஸ் குற்றச்சாட்டு.

உலகத்தர பல்கலை என்ற பெயரில் இடஒதுக்கீட்டை பறிக்க முயற்சி ராமதாஸ் குற்றச்சாட்டு.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் அரசுத்துறையில் 10, தனியார் துறையில் 10 என மொத் தம் 20 உலகத்தர பல்கலைக்கழகங் களை அமைப்பது பற்றி பொது மக்களிடம் மத்திய அரசு கருத்து களைக் கேட்டறிந்துள்ளது. உலகத்தர பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டம், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து பறிப்பதாகவே அமைந்திருக்கிறது. உலகத்தரம் கொண்ட பல்கலைக்கழகமாக ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும்போது, அந்நிறுவனம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இதுதான் இடஒதுக் கீட்டை பறிப்பதற்கான முதல் படியாகும். தமிழகத்தில் கோவை பாரதி யார் பல்கலைக்கழகம் உலகத் தரப் பல்கலையாக அறிவிக்கப் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பாரதியார் பல்கலைக்கழகம் இப் போது மாநிலப் பல்கலைக்கழகமாக இருப்பதால், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி 69 சதவீத இட ஒதுக்கீட்டை கடைபிடித்து வருகிறது. இதுவே உலகத்தர நிறுவனமாக மாறும்போது, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டப்படி 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும். இதனால், தமிழகத்தில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பாரதியார் பல்கலையில் 20 சதவீத இட ஒதுக்கீடு உலகத்தரம் என்ற பெயரில் ஓசையின்றி பறிக்கப்படும். மத்திய அரசின் உலகத்தர பல் கலைக்கழகங்கள் அமைக்கும் திட் டம் சமூக நீதிக்கு எதிரானது. எனவே, இத்திட்டத்தை கைவிட்டு, இதற் காக செலவிடவிருக்கும் ரூ.5,000 கோடியை ஏற்கனவே இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை வலுப் படுத்தவும், இட ஒதுக்கீட்டுடன் கூடிய புதிய உயர்கல்வி நிறுவனங்களை அமைக்கவும் ஒதுக்க வேண்டும். அதன்மூலம் சமூக நீதியை காக்க வேண்டும் என்றார்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.